அடுத்த இழப்பு.. கிரிக்கெட் வீராங்கனை ப்ரியா புனியா தாய் கொரோனாவுக்கு பலி - உருக்கமான பதிவு

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ப்ரியா புனியாவின் தாய் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

Coronaவால் உயிரிழந்த Women's Cricketer Priya Puniaவின் தாய் | OneIndia Tamil

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தில் உள்ளது. தினம் கொத்து கொத்தாக பலரும் உயிரிழந்து வருகின்றனர். வயதானவர்கள், இணை நோய் வந்தவர்கள் என்றெல்லாம் பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது.

சர்வதேச போட்டியில் மீண்டும் டிவில்லியர்ஸ்?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. குழப்பம் தீர்ந்தது!

குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், அனைவரையும் போட்டுத் தாக்கிவிடுகிறது. இதில், இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுவது தான் அதிர்ச்சி கலந்த உண்மை.

தாய் மரணம்

தாய் மரணம்

இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ப்ரியா புனியா தாய் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நீங்கள் எப்போதும் என்னை ஏன் பலமாக இருக்கச் சொன்னீர்கள் என இன்று நான் உணர்ந்தேன். உங்களுடைய இழப்பைச் சுமக்க ஒரு நாள் எனக்கு வலிமை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை இழக்கிறேன் அம்மா! நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள்.

ப்ரியா உருக்கம்

ப்ரியா உருக்கம்

என் வழிகாட்டும் நட்சத்திரம், என் அம்மா. உங்களை எப்போதும் நேசிக்கிறேன். வாழ்க்கையில் சில உண்மைகளை ஏற்றுக்கொள்வது கடினம். உங்கள் நினைவுகள் ஒருபோதும் மறக்கப்படாது! இளைப்பாருங்கள் அம்மா. தயவுசெய்து விதிகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கைகள் எடுக்கவும். இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது. மாஸ்க் அணியுங்கள், தனி நபர் இடைவெளியை கடைபிடியுங்கள், பாதுகாப்பாக இருங்கள், வலுவாக இருங்கள்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நாளை குவாரண்டைன்

நாளை குவாரண்டைன்

இதில் கொடுமை என்னவெனில், இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் அணியில் ப்ரியாவும் இடம் பெற்றுள்ளார். இதற்காக, அவர் நாளை (மே.19) முதல் மும்பையில் இங்கிலாந்து தொடருக்கான பயோ - பபுளில் இணைய வேண்டும். இதற்கான அனைத்து பணிகளில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான், தலை இடி இறங்கியது போன்று, அவர் தாய் இறந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டது.

அணியினர் சோகம்

அணியினர் சோகம்

முன்னதாக, மற்றொரு மகளிர் அணி வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி, தனது தாய் மற்றும் சகோதரியை அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலி கொடுத்திருந்தார். இப்போது ப்ரியா புனியாவும் தன் தாயை பறிகொடுத்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த மகளிர் அணியினரும் சோகத்தில் இருக்கின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
cricketer Priya Punia loses mother corona - ப்ரியா புனியா
Story first published: Tuesday, May 18, 2021, 19:00 [IST]
Other articles published on May 18, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X