For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அரையிறுதியில் இந்தியா.. அட்டாக் பவுலிங்கில் அசத்திய பும்ரா.. 286 ரன்னில் ஆல் அவுட்டான வங்கதேசம்

எட்ஜ்பாஸ்டன்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

உலக கோப்பை தொடரின் 40வது லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர்.

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றிய ராகுல் இந்த போட்டியில் சிறப்பான ஆடினார். ஆரம்பத்தில் கொடுத்த முக்கிய கேட்சுகளை வங்கதேசத்தினர் கோட்டை விட்டதால் அரைசதம், சதம் என்று முன்னேறினார் ஹிட்மேன் ரோகித்.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

அரையிறுதி சுற்று வாய்ப்பை தக்கவைத்து கொள்ள வங்கதேசத்துக்கு இந்த போட்டி ரொம்ப முக்கியமாகும். ஆகவே, இது வாழ்வா, சாவா போராட்டம். வெற்றி என்ற கட்டாயத்துடன் தொடக்க வீரர்களான இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் களம் இறங்கினர்.

பலன் கிடைக்கவில்லை

பலன் கிடைக்கவில்லை

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எக்காரணத்தை கொண்டும் விக்கெட்டுகளை இழந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனத்துடன் இருந்தனர். ஆனால், அவர்களின் இந்த முயற்சி பலனிக்கவில்லை. அணியின் ஸ்கோர் 39 ரன்களாக இருந்த போது சவுமியா சர்க்கார் வெளியேறினார்.

அவுட்டானார் சஹீப்

அவுட்டானார் சஹீப்

தமீம் இக்பால் 22 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் சஹீப் உல் ஹசன் களமிறங்கினார். ரஹீம் 24, லிட்டன் தாஸ் 22, உசேன் 3 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய சஹிப் உல் ஹசன் அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.சஹிப் உல் ஹசன் களத்தில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்ததால் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்று மைதானத்தில் இருந்த வங்கதேச ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால்... திருப்பத்தை ஏற்படுத்தினார் ஹர்திக் பாண்டியா. பாண்டியா வீசிய பந்தில் 66 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

வென்றது இந்தியா

வென்றது இந்தியா

அவரை தொடர்ந்து களமிறங்கிய பின்வரிசை பேட்ஸ்மென்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தோல்வி என்பது உறுதியானது. இருப்பினும் கடைசி வரை நம்பிக்கையுடன் வங்கதேசத்தினர் போராடினர். 48வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் எஞ்சியிருந்த 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து, 286 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறியது.

Story first published: Wednesday, July 3, 2019, 0:03 [IST]
Other articles published on Jul 3, 2019
English summary
India won by 28 runs against Bangladesh and enters in to semi final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X