For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாற்றுத் திறனாளிகள் உலகக்கோப்பை டி20 வென்ற இந்தியா.. பிசிசிஐ உதவி இல்லாமல் போராடி சாதித்த வீரர்கள்!

லண்டன் : டி20 மாற்றுத் திறனாளிகள் உலக கிரிக்கெட் தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது இந்திய மாற்றுத் திறனாளிகள் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதன் முறையாக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டுக்கான உலகக்கோப்பை போன்ற தொடராக நடந்த, பல நாடுகள் பங்கேற்ற இந்த டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது இந்திய அணி.

இந்திய அணி உலகக்கோப்பை வெல்லவில்லை என வருத்தப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் அணி உலகக்கோப்பை வென்றதற்கு நிச்சயம் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். காரணம், இந்திய கிரிக்கெட் அணி போன்ற வசதி வாய்ப்பின்றி இந்த அணி போராடி சாதித்துள்ளது.

பிசிசிஐ அங்கீகாரம்

பிசிசிஐ அங்கீகாரம்

இத்தனைக்கும் தங்களுக்கு பிசிசிஐ அங்கீகாரம் கிடைக்கவே மாற்றுத் திறனாளிகள் அணி தடுமாறி இருக்கிறது. அங்கீகாரம் கிடைத்தாலும், நிதி உதவி எதுவும் செய்யவில்லை பிசிசிஐ. அப்படி இருந்தும் சமாளித்து இங்கிலாந்து சென்று வெற்றி வாகை சூடியுள்ளது இந்திய அணி.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இந்த டி20 தொடரை இந்திய அணி தான் வெல்லும் என முன்பே கணிக்கப்பட்டு இருந்தது. இறுதிப் போட்டியில் தொடரை நடத்திய இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் மோதின.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இந்திய அணி. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 18௦ ரன்கள் குவித்து அசத்தினர் இந்திய வீரர்கள். துவக்க வீரர்கள் பனாசே 36, விக்ராந்த் கேனி 29, மகேந்திரன் 33, ஆர்.ஜி.சாண்டே 53 ரன்கள் எடுத்து அணி பெரிய ஸ்கோர் எடுக்க காரணமாக இருந்தனர்.

கடின இலக்கு

கடின இலக்கு

ஆர்.ஜி.சாண்டே 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்து இருந்தார். அவர் இரண்டு ஃபோர், நான்கு சிக்ஸ் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணிக்கு 181 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அதிரடி

இங்கிலாந்து அதிரடி

இங்கிலாந்து அணி முதலில் அதிரடியாக ஆடியது. முதல் 11 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 90 ரன்கள் குவித்து இருந்தது. அப்போது இங்கிலாந்து தான் வெற்றி பெறும் என கருதப்பட்டது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அப்போது இந்திய அணியின் பந்துவீச்சு வேகம் பெற்றது. தொடர்ந்து விக்கெட்களை அள்ளிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களுக்குள் சுருட்டியது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 மாற்றுத் திறனாளிகள் உலக கிரிக்கெட் தொடரை வென்று வாகை சூடியது.

Story first published: Wednesday, August 14, 2019, 23:28 [IST]
Other articles published on Aug 14, 2019
English summary
India won first Physical Disability World Series T20 after beating England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X