For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் மண்ணை கவ்விய தென் ஆப்ரிக்கா… ஹிட்மேன் அபார சதம்..! இந்தியா அசத்தல் வெற்றி..!!

Recommended Video

WORLD CUP 2019 IND VS SA | 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சவுதாம்ப்டன்:உலக கோப்பையில் எதிர்பார்த்தபடிய தென் ஆப்ரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி இருக்கிறது இந்திய அணி.

கிட்டத்தட்ட பெரும்பாலா அணிகள் தங்களது முதல் போட்டியை உலக கோப்பையில் எதிர் கொண்டு விட்டன. இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு... ஜூன் 5ம் தேதி தான் வந்திருக்கிறது.

தமது முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது இந்தியா. அற்புதமான பவுலிங் யூனிட், சிறப்பான பேட்டிங் வரிசை கொண்ட இந்தியாவுக்கு தான் கோப்பை என்ற நிலையில் இந்த போட்டியை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்கொண்டது.

தெ.ஆ பேட்டிங்

தெ.ஆ பேட்டிங்

டாசில் இந்தியா தோற்க.. முதலில் களம் இறங்கியது தென் ஆப்ரிக்கா. ஆனால்... இந்தியாவின் பவுலிங் யூனிட்.... தென் ஆப்ரிக்காவை ஒட்டு மொத்தமாக சாய்த்து விட்டது. பும்ராவின் அனல் பறக்கும் பந்துகள், சஹலின் பந்துவீச்சு.. என ஒட்டு மொத்த பவுலிங் யூனிட்டே கலக்கியது.

வெற்றி இலக்கு 228

வெற்றி இலக்கு 228

அதன் விளைவு ஸ்கோர்போர்டில் தெரிந்தது. ஒரு கட்டத்தில் 50 ஓவர்களுக்கு தென் ஆப்ரிக்கா தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு வழியாக தடுமாறி 9 விக். இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது தென் ஆப்ரிக்கா. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி... என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்தியா. தமது பந்துவீச்சை மலை போல நம்பி களத்திற்கு வந்தது தென் ஆப்ரிக்கா. தவானும், ரோகித்தும் இன்னிங்சை தொடங்கினர்.

2 பேர் அவுட்

2 பேர் அவுட்

தவான் வழக்கம் போல 8 ரன்களில் ஏமாற்றிவிட்டு, பெவிலியன் திரும்பி போய் உட்கார்ந்து கொண்டார். ரோகித்துடன் கைகோர்த்தார் கோலி. ஆகா... அற்புதம் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் 18 ரன்கள் போதும் என்று திருப்தி அடைந்தவராக கோலி வெளியேறினார். 54 ரன்களுக்குள் மிக முக்கிய விக்கெட்டுகள் காலி என்பதால் கொஞ்சம் ஓவர் குஷியுடன் இருந்தனர் தென் ஆப்ரிக்கா வீரர்கள்.

ராகுல் சிறப்பு

ராகுல் சிறப்பு

இளம் வீரர் ராகுல், ரோகித்துடன் கை கோர்க்க... நிலைமை அப்படியே உல்டாவானது. இந்த ஜோடியை பிரிக்க தென் ஆப்ரிக்க பல தடவை முயற்சித்தனர். அதற்கான பலன் ஸ்கோர் 139 ரன்களாக இருந்த போது தான் கிடைத்தது. ரபாடா பந்தில் ராகுல் அவுட். பலத்த கரவொலிகளுக்கு இடையே மட்டையை பிடித்தபடி களத்துக்கு வந்தார் தல தோனி.

உறுதியான தோல்வி

உறுதியான தோல்வி

ஒரு பக்கம் நங்கூரமாக ரோகித் நிற்க... மறு முனையில் தமது அனுபவ ஆட்டத்தை காட்டினார் தோனி. மெதுவாக... அதே நேரத்தில் நிதானமாக ரன்கள் வந்து கொண்டேயிருந்தன. 200 ரன்களை கடந்த போதே தென் ஆப்ரிக்க வீரர்களின் முகத்தில் தோல்வி சோகம் எக்கச் சக்கமாக அப்பிக் கொண்டதை அப்பட்டமாக பார்க்க முடிந்தது. 42வது ஓவரில் அருமையாக சதம் அடித்தார் ஹிட் மேன் ரோகித் சர்மா.

ஹிட்மேன் சதம்

ஹிட்மேன் சதம்

உலக கோப்பையில் தமது 2வது சதம். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 23வது சதம். அரங்கமே அதிர்ந்தது. அதன் பிறகும் அவர் தமது அதிரடியை விடவில்லை. தோனி, ரோகித் ஜோடி வெற்றி கோட்டை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் தல தோனி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

வெற்றி பெற்றது இந்தியா

வெற்றி பெற்றது இந்தியா

அப்போது ஸ்கோர் 213. இன்னும் குறைந்த ரன்களே இருக்கும் நேரத்தில் களத்தில் புகுந்தார் ஹர்திக். அவர் வந்த 9வது பந்துகளில் இந்தியாவுக்கு வெற்றி. இனியும் ரசிகர்களை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று நினைத்தாரே.. தெரியவில்லை.

அபார வெற்றி

அபார வெற்றி

2 பவுண்டரிகளை வெளுத்து தள்ளினார். வெற்றி அருகே வந்தது. 47.3வது ஓவரில் பெளுக் வோயா பந்தை பாண்டியா மீண்டும் பவுண்டரிக்கு தள்ளிவிட... இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான, அசத்தலான... அபார வெற்றி பெற்றது.

ரோகித் ஆட்ட நாயகன்

ரோகித் ஆட்ட நாயகன்

உலக கோப்பை தொடரின் முதல் வெற்றி. மறுமுனையில் 3வது தோல்வியுடன் தென் ஆப்ரிக்கா. எதிர்பார்த்தது போலவே அருமையான ஆட்டம் ஆடி கலக்கிய ரோகித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Wednesday, June 5, 2019, 23:52 [IST]
Other articles published on Jun 5, 2019
English summary
India won the match against south africa in world cup 2019 series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X