உலககோப்பையை வென்று இன்றுடன் 39 ஆண்டுகள்.. சில தருணங்கள் கனவை தூண்டும்.. சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

மும்பை: கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஜூன் 25ஆம் தேதி 1983ஆம் ஆண்டு இதே நாளில் தான் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் கத்துக்குத்து அணியாக அந்த காலத்தில் விளங்கிய இந்திய கிரிக்கெட் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதனை படைத்தது.

3 பவுலர்களுக்குமே வாய்ப்பில்லை.. அயர்லாந்து தொடரில் பிசிசிஐ காட்டும் பாரபட்சம்.. கடுப்பில் ரசிகர்கள்3 பவுலர்களுக்குமே வாய்ப்பில்லை.. அயர்லாந்து தொடரில் பிசிசிஐ காட்டும் பாரபட்சம்.. கடுப்பில் ரசிகர்கள்

கபில்தேவ் அணி உலக கோப்பையை வென்ற பிறகு தான், இந்தியா கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்தது.

சிரித்த பத்திரிகையாளர்கள்

சிரித்த பத்திரிகையாளர்கள்

கபில்தேவ் மற்றும் அணி மேலாளரை தவிர வேறு யாரும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கவில்லை. உலக கோப்பையை வெல்ல தான் இங்கு வந்து இருக்கிறோம் என்று கபில் தேவ் கூறிய உடன், அங்கிருந்த பத்திரிகையாளர்களும் சிரித்துள்ளனர். அவ்வளவு ஏன், இறுதிப் போட்டிக்கு முன்பே இந்திய அணிக்கு டிக்கெட் போடும் நிகழ்வும் நடந்து இருக்கிறது.

கபில்தேவ் கனவு

கபில்தேவ் கனவு

ஆனால், கபில்தேவ் புதிய கனவு ஒன்றை கண்டார். தனது கனவை மற்ற வீரர்கள் மனதிலும் விதைத்து, அதனை நம்ப வைத்தார்.போதிய சம்பளம், போதிய உணவு எதும் இல்லாத நேரத்தில் கூட, அப்போதைய இந்திய அணி புதிய சரித்திரத்தை உருவாக்கியது. கபில்தேல் லார்ட்ஸ் பால்கனியில் இன்று உலகக் கோப்பையை தூக்கியது நாள் தான் பிற்காலத்தில் சச்சின் போன்ற பல ஜாம்பவான்கள் உருவாக காரணமாக அமைந்தது.

சச்சின் வாழ்த்து

சச்சின் வாழ்த்து

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், வாழ்க்கையில் சில தருணங்கள் தான் நமக்கு ஊக்கத்தை அளித்து கனவு காண தூண்டும். 1983ஆம் ஆண்டு இதே நாள் உலகக் கோப்பையை வென்றோம். எனக்கு அப்போதே தெரியும் இது தான் என் வாழ்க்கையில் நான் செய்ய வேண்டும்.

விவிஎஸ் லட்சுமண் டிவிட்

விவிஎஸ் லட்சுமண் டிவிட்

இது குறித்து பேசிய விவிஎஸ் லட்சுமண், 1983ஆம் ஆண்டு இதே நாள் தான் நமது கனவு மெய்ப்படும் என்று அனைத்து இந்தியர்களும் உணர்ந்தார்கள். அந்த தருணத்தை நினைத்தால் இன்றும் நமக்கு பெருமையாக இருக்கிறோம். இந்த வெற்றியை பார்த்து தான் என்னை போன்ற மற்றவர்களும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டோம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India world cup 39th year anniversary – Sachin tribute to kapil dev உலக கோப்பையை வென்று இன்றுடன் 39 ஆண்டுகள்.. சில தருணங்கள் கனவை தூண்டும்.. சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
Story first published: Saturday, June 25, 2022, 15:45 [IST]
Other articles published on Jun 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X