அருள்மிகு சச்சின் டெண்டுல்கர் திருக்கோவில்.. கட்டுகிறார் மனோஜ் திவாரி!

By Sutha

பாட்னா: கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்று சென்ற சச்சின் டெண்டுல்கரை ரசிகர்கள் கடவுளாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் நடிகர் மனோஜ் திவாரியோ, கோவிலே கட்டத் துணிந்து விட்டார்.

பீகாரில் இந்த கோவிலை கட்டுகிறார் திவாரி. இதற்கான பணிகளையும் சட்டுப்புட்டென்று ஆரம்பித்து விட்டார் திவாரி.

அடுத்த ஆண்டு இந்தக் கோவிலை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடத் திட்டமிட்டுள்ளாராம் திவாரி.

லோக்கல் நடிகர்

லோக்கல் நடிகர்

மனோஜ் திவாரி என்று கிரிக்கெட் வீரர் இருக்கிறார். இது உலகம் அறிந்தது. ஆனால் அதே பெயரில் பீகாரில் வலம் வரும் நடிகர்தான் இவர். இவர்தான் இந்தக் கோவில் கட்டும் பணியில் குதித்துள்ளார்.

ரசிகர்களின் கடவுள்

ரசிகர்களின் கடவுள்

கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் சச்சின். அதை அப்படியே உண்மயாக்கவே கோவில் கட்டுகிறாராம் திவாரி.

அஞ்சு அடி 6 இன்ச்சு சிலை

அஞ்சு அடி 6 இன்ச்சு சிலை

இந்தக் கோவிலில் டெண்டுல்கரின் விக்கிரகம் ஐந்து அடி ஆறு இன்ச் அளவில் இருக்குமாம். அதற்கான தொடக்க விழாவில் திவாரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

எந்த ஊர்லப்பா...

எந்த ஊர்லப்பா...

பீகாருக்குப் போய், அங்கிருந்து பாபுவா மாவ்டடம் அத்ரதுலியா கிராமத்திற்குப் போனால் இந்தக் கோவில் கட்டும் இடத்தைப் பார்க்கலாம்.

ப்ளூ கலர் சட்டையும்.. கையில் கோப்பையும்

ப்ளூ கலர் சட்டையும்.. கையில் கோப்பையும்

சச்சினின் சிலை இந்திய வீரர்கள் அணியும் நீல நிற சீருடையில், கையில் உலகக் கோப்பையுடன் இருப்பது வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்பிள் சிலையாகும் இது.

நல்ல பெரிய்ய கோவில்தான்

நல்ல பெரிய்ய கோவில்தான்

கிட்டத்தட்ட 6000 சதுர அடிப்பரப்பளவில் ஆலயத்தை கட்டுகிறார் திவாரி. இதற்கு அவர் திட்டமிட்டுள்ள செலவு 70 லட்சம் ரூபாய் ஆகும்.

டோணி சாமி, யுவராஜ் சிங் சாமியும்...

டோணி சாமி, யுவராஜ் சிங் சாமியும்...

சச்சினுக்கு மட்டுமல்லாமல், இந்தக் கோவிலில் கேப்டன் டோணி, யுவராஜ் சிங் ஆகியோருக்கும் ஆளுக்கு ஒரு சிலையை வைத்து அவர்களையும் கெளரவிக்கவுள்ளாராம் திவாரி.

சச்சினே வந்து திறந்தால் நல்லாத்தான் இருக்கும்

சச்சினே வந்து திறந்தால் நல்லாத்தான் இருக்கும்

இந்தக் கோவிலை சச்சினே வந்து திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்படுகிறார் திவாரி.

இது எங்க சொந்த ஊருங்க

இது எங்க சொந்த ஊருங்க

இந்தக் கோவில் குறித்து திவாரி கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றதுமே எனது சொந்த கிராமத்தில் சச்சின் கோவிலைக் கட்டத் தீர்மானித்து விட்டேன். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பெரும் சுற்றுலாத் தலமாகவும் அமையும் என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Indian cricket legend Sachin Tendulkar might soon worshipped in a temple planned in his name in Bihar state. The shrine is being built by Manoj Tiwary, a local film star, and will be opened to the public early next year. Tendulkar retired from international cricket following India's victory over the West Indies in a Test in Mumbai last week. Many of his fans in India describe Tendulkar as the god of cricket.
Story first published: Thursday, November 21, 2013, 18:10 [IST]
Other articles published on Nov 21, 2013
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more