ராபின் உத்தப்பா செய்த அதே சாதனை.. அரைசதம் அடித்து மிரட்டிய இளம் வீரர்!

திருவனந்தபுரம் : இந்தியா -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.

இந்த போட்டியில் 3வதாக களமிறங்கிய ஆல்-ரவுண்டர் சிவம் தூபே, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸ்களுடன் 30 பந்துகளில் 54 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம் 3வது பேட்ஸ்மேனாக அவரை களமிறக்கிய கேப்டன் கோலியின் நம்பிக்கையை அவர் பூர்த்தி செய்துள்ளார்.

இந்திய அணிக்காக அவர் தன்னுடைய முதல் அரைசதத்தை டி20 போட்டியில் அடித்து இந்திய ஆட்டக்காரர் ராபின் உத்தப்பாவுடன் இணைந்துள்ளார். கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ராபின் உத்தப்பா தன்னுடைய முதல் அரைசதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது.

 இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஐதராபாத்தில் முதல் டி20 போட்டியை விளையாடி இந்தியாவிடம் தோல்வியை அடைந்தது. இதனிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று ஆடப்பட்ட இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 30 பந்துகளில் 54 ரன்கள் குவிப்பு

30 பந்துகளில் 54 ரன்கள் குவிப்பு

இந்த போட்டியின் 3வது ஆட்டக்காரராக இளம் வீரர் சிவம் தூபே களமிறக்கப்பட்டார். கேப்டன் கோலி நம்பிக்கையுடன் இவரை 3வது ஆட்டக்காரராக களமிறக்க, அந்த நம்பிக்கையை காப்பாற்றும்வகையில் தூபே, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸ்களுடன் 30 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

 மகிழ்ச்சி அளிக்கவில்லை என பேட்டி

மகிழ்ச்சி அளிக்கவில்லை என பேட்டி

இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு தூபே அடித்த 54 ரன்கள் மிகுந்த உதவியாக இருந்தது. ஆயினும் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், தனது முதல் அரைசதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 தூபேவின் முதல் அரைசதம்

தூபேவின் முதல் அரைசதம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடி தூபே தனது முதல் அரைசதத்தை விளாசியுள்ளார். இதன்மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை அவர் பெற்றுள்ளார்.

 டி20 போட்டியில் முதல் அரைசதம்

டி20 போட்டியில் முதல் அரைசதம்

இதனிடையே, சர்வதேச டி20 போட்டியில் விளையாடி தனது முதல் அரைசதத்தை அடித்துள்ள சிவம் தூபே, இந்த பட்டியலில் இரண்டாவது இந்திய வீரராக இணைந்துள்ளார். முன்னதாக கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் ராபின் உத்தப்பா, இதேபோல தனது முதல் அரைசதத்தை அடித்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Shivam Dube joins Robin Uthappa in unique T20I list
Story first published: Monday, December 9, 2019, 14:50 [IST]
Other articles published on Dec 9, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X