அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. விராட் கோலியின் மோசமான அவுட்.. இந்திய அணி தடுமாற்றம்

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது.

IND vs ENG 5th Test: Kohli-யின் Heart-Breaking Reaction! | Aanee's Appeal | *Cricket

இந்திய அணியின் தொடக்க வீரராக புஜாரா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.

முதலில் கொஞ்சம் ஓவர்களில் இந்திய அணி லாவகமாக விளையாடி ரன்களை சேர்த்தாலும். பிறகு வழக்கம் போல் தடுமாறினர்.

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. இத்தனை அதிரடி வீரர்களா?இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. இத்தனை அதிரடி வீரர்களா?

சொதப்பிய ஓபனிங்

சொதப்பிய ஓபனிங்

ஆண்டர்சன் வீசிய 5வது ஆஃப் ஸ்டம்ப் லைனில் சிக்கி சுப்மான் கில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கவுண்டி கிரிக்கெட்டில் சதம் சதமாக விளாசியதால் , இந்த தொடரில் பெரிதாக சாதிப்பார் என எதிர்பார்த்த புஜாரா, 13 ரன்களில் வெளியேறினார். ஆட்டத்தின் 20.1வது ஓவரின் போது மழை குறுக்கிட்டது.

வீணான வாய்ப்பு

வீணான வாய்ப்பு

அப்போது ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை தடைப்பட்டது. கரு மேகங்கள் சூழ்ந்ததால் பந்து நன்கு ஸ்விங் ஆக இந்திய வீரர்கள் தடுமாறினர். விஹாரி தமக்கு கிடைத்த கேட்ச் மிஸ் வாய்ப்பை பயன்படுத்தாமல் 53 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார். இதனையடுத்து அவனைவரின் பார்வையும் விராட் கோலி மீது திரும்பியது.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

விராட் கோலி பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடினார். கடந்த முறை இங்கு விராட் கோலி சதம் விளாசியதால், அந்த அனுபவம் கைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்தார். 19 ரன்கள் எடுத்திருந்த போது பாட்ஸ் வீசிய பந்தை கணிக்க முடியாத விராட் கோலி, அதை லீவ் செய்தார்.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

ஆனால், அது ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனையடுத்து விராட் கோலி ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி திரும்பினார். இதனையடுத்து களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், பாசிட்டிவாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். ஆனால் லெக் சைடு சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். இதன் மூலம் 98 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian batsman is struggling against England 5th test அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. விராட் கோலியின் மோசமான அவுட்.. இந்திய அணி தடுமாற்றம்
Story first published: Friday, July 1, 2022, 20:29 [IST]
Other articles published on Jul 1, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X