For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் என்று தெரிகிறதா.. கோஹ்லி தீ என்று புரிகிறதா.. சிங்கிள் இல்ல டபுள் செஞ்சுரி!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

By Shyamsundar

நாக்பூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது கோஹ்லியின் 5வது சதம் ஆகும்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை முரளி விஜய், புஜாரா ஆகியோர் செஞ்சுரி அடித்து இருந்தனர். அதன்பின் கோஹ்லியும் அதிரடியாக ஆடி செஞ்சுரி அடித்தார்.

Indian Captain Kohli scores his 19th test century

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து கோஹ்லி மிகவும் சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடி முதலில் செஞ்சுரி அடித்தார். அந்த சாதனையோடு பெவிலியன் திரும்புவார் என்று நினைத்த போது 150 தொட்டார்.

ஆனால் பசி அடங்காத சிங்கம் போல அதிரடியை மேலும் தொடர்ந்தார். மிகவும் வேகமாக ஆடிய கோஹ்லி 200 ரன்களை அடைந்தார். அதிரடியாக ஆடிய கோஹ்லி 260 பந்துகளில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது கோஹ்லியின் 5வது சதம் ஆகும். 213 ரன்கள் எடுத்து இருந்த போது கோஹ்லி அவுட் ஆனார்.

Story first published: Sunday, November 26, 2017, 15:57 [IST]
Other articles published on Nov 26, 2017
English summary
Indian Captain Kohli scores his 5th test double century in second test match against Sri Lanka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X