For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லிக்கு ஓய்வு.. இந்திய அணிக்கு புதிய கேப்டனாக போவது 'இவர்கள்' தான்!

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லிக்கு பிசிசிஐ ஒருமாதம் ஓய்வு அளித்து இருக்கிறது.

By Shyamsundar

டெல்லி: தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லிக்கு பிசிசிஐ ஒருமாதம் ஓய்வு அளித்து இருக்கிறது. கோஹ்லி ஏற்கனவே விடுமுறை கேட்டு பிசிசிஐயிடம் விண்ணப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதால் அவருக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் இலங்கைக்கு எதிராக மீதம் இருக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு புதிய இரண்டு கேப்டன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெஸ்ட் அணிக்கு தனி கேப்டனும், ஒருநாள் மற்றும் டி-20 அணிக்கு வேறு கேப்டனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வு கேட்டார் கேப்டன்

ஓய்வு கேட்டார் கேப்டன்

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கோஹ்லி தொடர்ந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். அதுவும் கடந்த சில வாரங்களாக இலங்கை தொடர், ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர், மீண்டும் இலங்கை தொடர் என விளையாடி வருகிறார். இந்த நிலையில் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வாரியமான் பிசிசிஐயிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். உடலுக்கு ஓய்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

சண்டை போட்ட கோஹ்லி

சண்டை போட்ட கோஹ்லி

இந்த நிலையில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் கோஹ்லி பிசிசியிடம் சண்டைக்கு சென்றார். மேலும் ''தொடர்சியாக பல போட்டிகள் விளையாடுகிறோம். உடலை சரியாக கவனிக்க முடியவில்லை. உடலுக்கும் மனதுக்கு ஓய்வு வேண்டும்'' என்று பிசிசிஐ குறித்து கோபமாக பேசி இருக்கிறார். இவரின் இந்த கருத்துக்கு கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இலங்கைத் தொடர்

இலங்கைத் தொடர்

இந்த நிலையில் கோஹ்லியின் இந்த கோரிக்கையை பிசிசிஐ தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி கோஹ்லி மீதம் இருக்கும் இலங்கை தொடரில் கலந்து கொள்ள மாட்டார். இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். கோஹ்லியின் இடத்தில் தமிழ்நாட்டை சேர்த்த விஜய் ஷங்கர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். ஒருநாள் போட்டியில் இன்னும் யாரை மூன்றாவது பிளேயராக இறங்குவார்கள் என்று முடிவு செய்யப்படவில்லை.

புதிய கேப்டன் யார்

புதிய கேப்டன் யார்

விராட் கோஹ்லிக்கு ஒய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட இருக்கிறார். இலங்கைக்கு எதிராக மீதம் இருக்கும் 3வது டெஸ்ட் போட்டி அவர் தலைமையின் கீழ் நடக்கும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என முடிவாகியுள்ளது. இனி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜனவரியில் நடக்க இருக்கும் போட்டியில் விளையாடவே கோஹ்லி அணிக்கு திரும்புவார்.

Story first published: Monday, November 27, 2017, 10:13 [IST]
Other articles published on Nov 27, 2017
English summary
Kohli is playing continuously for last three months. So he has planned to take some rest and if he is rested for the remainder Srilanka series then Rohit Sharma lead limited over series and Rahane will lead one test match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X