For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் பர்த்டே ஸ்பெஷல்.. யாராலும் நெருங்க முடியாத ஹிட்மேன் சாதனைகள்.. சான்சே இல்லாத சாதனை பட்டியல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

6 முறை ( 5 மும்பை + 1 ஐதராபாத்) ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா, நடப்பாண்டில் இந்தியாவுக்கு ஐசிசி கோப்பையை வென்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ரோகித் சர்மாவின் 15 ஆண்டுக்கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் படைத்துள்ள சாதனை பட்டியலை தற்போது காணலாம்.

சச்சின் பர்த்டே போச்சு..ரோகித் பிறந்தநாளாவது சிறப்பா இருக்குமா? முதல் வெற்றிக்காக களமிறங்கும் மும்பைசச்சின் பர்த்டே போச்சு..ரோகித் பிறந்தநாளாவது சிறப்பா இருக்குமா? முதல் வெற்றிக்காக களமிறங்கும் மும்பை

தொட முடியாத சாதனை

தொட முடியாத சாதனை

தொடக்க வீரராக சர்வதேச கிரிக்கெடடில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர், அதிக சதம் விளாசிய வீரர் ரோகித் சர்மா ஆவார். அனைத்து விதமான ஐசிசி தொடர்களிலும் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் நமது ஹிட்மேன் தான். 4 அணிகளுக்கு இடையே அனைத்து விதமான போட்டியிலும் சதம் விளாசிய ஒரே வீரர் ரோகித் தான். SENA நாடுகளில் 10 சதம் அடித்த ஒரே ஆசிய வீரர் என்ற பெருமையையும் ரோகித் படைத்துள்ளார்.

சிறந்த தொடக்க வீரர்

சிறந்த தொடக்க வீரர்

இங்கிலாந்து மண்ணில் 7 மைதானங்களில் சதம் விளாசிய ஒரே வெளிநாட்டு வீரர், இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் விளாசிய வெளிநாட்டு தொடக்க வீரர் , அதிவேகமாக 10 ஆயிரம், 11 ஆயிரம் சர்வதேச ரன்களை அடித்த 2வது தொடக்க வீரர் என்ற பெருமையையும் ரோகித் படைத்துள்ளார். அனைத்து விதமான போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய தொடக்க வீரரும் ரோகித் சர்மா தான்.

அதிகமுறை இரட்டை சதம்

அதிகமுறை இரட்டை சதம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையையும் ரோகித்தையே சேரும். இதே போன்று சர்வதேச ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிபட்ச ஸ்கோர் (264 ரன்கள்) அடித்தவர் என்ற சாதனையும் ரோகித் பெயரில் உள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.

டி20 போட்டியிலும் கிங்

டி20 போட்டியிலும் கிங்

சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் 4 மைதானங்களில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவையே சேரும். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய தொடக்க வீரர் என்ற பெயரும் ரோகித் சர்மாவுக்கு தான் சேரும். சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர், சர்வதேச டி20 போட்டியில் அதிக சதம் (4) விளாசிய வீரர், சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர், 12வது ஓவரிலே சதம் விளாசிய வீரர் என்ற பெருமையும் ரோகித்தே சேரும்.

கேப்டனாகவும் சாதனை

கேப்டனாகவும் சாதனை

சர்வதேச டி20 போட்டியில் SENA நாடுகளில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வெளிநாட்டு வீரர், அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய கேப்டன், சர்வதேச டி20 போட்டியில் அதிக முறை சதம் விளாசிய கேப்டன், டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் (847) அடித்த இந்திய வீரர், கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வெற்றியை பெற்றவர், சர்வதேச டி20 போட்டியில் எதிரணியை 5 முறை ஓயிட்வாஷ் செய்த ஒரே கேப்டன். ஒருநாள் உலககோப்பை போட்டியில் அதிக சதம் விளாசிய சீச்சினின் சாதனையை சமன் செய்தவர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

Recommended Video

IPL 2022: Yuvraj Singh’s SPECIAL ADVICE To Out Of Form Virat Kohli | Oneindia Tamil
Story first published: Saturday, April 30, 2022, 11:32 [IST]
Other articles published on Apr 30, 2022
English summary
Indian captain Rohit sharma Birthday Special – Records and Acheivements Full list ரோகித் பர்த்டே ஸ்பெஷல்.. யாராலும் நெருங்க முடியாத ஹிட்மேன் சாதனைகள்.. சான்சே இல்லாத சாதனை பட்டியல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X