இந்தியா vs ஆஸி 2வது போட்டி.. டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா.. மீண்டும் வந்த பும்ரா, பண்ட்!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

இதன்மூலம் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. அதேபோல் போட்டியில் வெற்றிபெற்று, தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டு.. ஆனால் ஈரப்பதத்தால் ஆட்டத்தை கைவிடும் நிலை.. விரக்தியில் ரசிகர்கள் உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டு.. ஆனால் ஈரப்பதத்தால் ஆட்டத்தை கைவிடும் நிலை.. விரக்தியில் ரசிகர்கள்

8 ஓவர்கள்

8 ஓவர்கள்

இதனிடையே மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், டாஸ் போடுவதில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 8.45 மணிக்கு நடுவர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஈரப்பதம் குறைந்தது. இதன்பின்னர் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இரு அணிகளுக்கும் 2 ஓவர்கள் பவர் ப்ளே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இதனைத்தொடர்ந்து இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திய அணியில் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பின் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய பிளேயிங் லெவன்

இந்திய பிளேயிங் லெவன்

இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்சல் படேல், பும்ரா, ரிஷப் பண்ட், சாஹல்

பேட்ஸ்மேன்களுக்கு முக்கியத்துவம்

பேட்ஸ்மேன்களுக்கு முக்கியத்துவம்

அதேபோல் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோர் ஒரே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 8 ஓவர்கள் போட்டி என்பதால், அனைத்து ஓவர்களிலும் அடித்து ஆட இந்திய அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
After a Long Delay of Toss, Indian Captain Rohit sharma Won the Toss and Choose to Bowl against Australia in Nagpur t20 Match.
Story first published: Friday, September 23, 2022, 21:27 [IST]
Other articles published on Sep 23, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X