For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிரூபிச்சி காட்னாதான் உள்ள வரணும்.... எந்த காம்ப்ரமைஸும் இல்ல...வருண் விஷயத்தில் கரார் காட்டும் கோலி

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி இடம் பெறாத விவகாரத்தில் விராட் கோலியும் கைவிரித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிசிசிஐ சார்பில் யோ யோ உடற்தகுதி தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாத வருண் சக்கரவர்த்திக்கு எந்த விலக்கும் அளிக்கப்படாது எனவும் விதிமுறை எல்லாருக்கும் பொதுவானதுதான் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தேர்ச்சி பெறவில்லை

தேர்ச்சி பெறவில்லை

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாட தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் தேர்வாகியிருந்தர். எனினும் யோ யோ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தினால் வருண் இந்த தொடரை மிஸ் செய்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடருக்கு அவர் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் தோள்பட்டை காயம் காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

யோ யோ

யோ யோ

ஒரு வீரர் 2 கிலோ மீட்டர் தூரத்தை 8.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் அல்லது யோ யோ டெஸ்டில் 17.1 புள்ளிகள் பெற வேண்டும். ஆனால் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இரண்டிலுமே தேர்ச்சி பெறவில்லை. எனவே இங்கிலாந்துக்கு டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு அதிர்ஷடம் இல்லாத வீரர் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கைவிரித்த கோலி

கைவிரித்த கோலி

இதுகுறித்து பேசிய விராட் கோலி, இந்திய அணியில் மிகவும் தகுதியான மற்றும் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே உடற்தகுதி தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அதன் காரணமாக தான் இந்திய அணி கிரிக்கெட் மிகப்பெரிய இடத்தில் உள்ளது. எனவே இதனை ஒவ்வொரு வீரரும் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை கொடுக்கும் வீரரை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதில் யாருக்கும் எந்த விலக்கும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

காட்டம்

காட்டம்

வருண் சக்கரவர்த்தி உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதது குறித்து முன்னாள் வீரர் ஹேமங் பதானி கடும் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து ட்வீட் செய்த அவர், கடந்த 3 - 4 மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் நீங்கள் விளையாடாமல் இருந்தீர்கள். அந்த நேரங்களில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். முன்கூட்டியே உங்களை தயார்படுத்தி கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Story first published: Friday, March 12, 2021, 21:32 [IST]
Other articles published on Mar 12, 2021
English summary
Indian Captain Virat Kohli on Varun Chakravarthy’s failure in fitness test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X