For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரவி சாஸ்திரி 2.0: இந்திய அணியில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..! வீரர்களுக்கு செக்..! புது பிளான்

Recommended Video

Watch Video : Sanjay bangar verbal fight with selection committee member

மும்பை: 2வது முறை பயிற்சியாளர் பதவியை அலேக்காக தூக்கியுள்ள ரவி சாஸ்திரி, யோ யோ டெஸ்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளது, வீரர்களின் பிபியை எக்கச் சக்கமாக ஏற்றி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 3 வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியது. அனைத்து போட்டிகளிலும் ஒரு கலக்கு கலக்கி தொடரை வெற்றிகரமாக வென்றுள்ளது.

இன்னும் சொல்ல போனால், ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்தியா தொடரை சிறப்பாக முடித்தது. இந்திய அணியின் வரலாற்றில், இந்த வெற்றி ஒரு முக்கிய தொடராக கருதப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற எந்த வாய்ப்பும் கொடுக்காமல் அனைத்து வெற்றிகளையும் அள்ளி அழகாக தமது கையில் வைத்துக் கொண்டது.

அட்டவணை தயாரிப்பு

அட்டவணை தயாரிப்பு

இப்போது, அடுத்து தென் ஆப்ரிக்கா தொடர். தென் ஆப்ரிக்க அணி இந்தியா வருகிறது. போட்டி அட்டவணையும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்களும் அந்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

2021 வரை தொடர்வார்

2021 வரை தொடர்வார்

இந்நிலையில், ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணிக்கு பாராட்டுகள். அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணில் வீழ்த்தியுள்ளோம். இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததில்லை.

2021 வரை தொடர்வார்

2021 வரை தொடர்வார்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக, அதே ரவி சாஸ்திரி மீண்டும் வந்திருக்கிறார். 2021ம் ஆண்டு நவம்பர் வரை அவர் தான் பயிற்சியாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக 2வது இன்னிங்சை ஆரம்பித்துள்ள ரவி சாஸ்திரிக்கு தென் ஆப்ரிக்கா தொடர் ஒரு சவாலானது என்றே கூறலாம்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இந் நிலையில், ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணிக்கு பாராட்டுகள். அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணில் வீழ்த்தியுள்ளோம். இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததில்லை.

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. வரும் காலத்தில் இதுபோன்று எளிதாக நடக்கும் என்றும் நினைக்கவில்லை என்றார்.

யோ யோ டெஸ்ட்

யோ யோ டெஸ்ட்

அதே நேரத்தில், யோ யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண்ணை அவர் அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. யோ யோ டெஸ்ட் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அளவீடு. வீரர்களின் உடல்தகுதியை நிர்ணயிக்கும் ஒரு அளவுகோல்.

17 மதிப்பெண்

17 மதிப்பெண்

முன்னதாக 16.1 மதிப்பெண் எடுத்தால் இதில் தேர்ச்சி பெற்று இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்று இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை மாறும் என்று தெரிகிறது. புதியதாக மீண்டும் பயிற்சியாளராகி உள்ள ரவி சாஸ்திரி அந்த மதிப்பெண்ணை 17 என்ற அளவில் உயர்த்த முடிவு செய்திருக்கிறார்.

அதிருப்தி

அதிருப்தி

ஆனால், வீரர்களின் மத்தியில் யோ யோ டெஸ்ட் மதிப்பெண்ணை அதிகரிக்கும் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. சில வீரர்கள் அதனை இப்போது ஏன் உயர்த்த வேண்டும் என்று கருத்துகளை கூறி வருவதாக நம்பப்படுகிறது.

Story first published: Wednesday, September 11, 2019, 11:16 [IST]
Other articles published on Sep 11, 2019
English summary
Indian coach ravi shastri plans to increase yoyo test mark to 17.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X