For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்ப தாங்க நிம்மதி… பும்ராவுக்கு ஒண்ணுமில்லையாம்.. எல்லாம் சரியாயிடுச்சாம்

மும்பை:ஸ்டார் பிளேயர் பும்ராவின் காயம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை, உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று மும்பை நிர்வாகம் தெரிவித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் டெல்லி வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டின் அதிரடியான பேட்டிங்கை இனி இந்த ஐபிஎல் தொடரில் மறக்கவே முடியாது. பண்டின் காட்டடியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 213 ரன்களை குவித்தது.

2 நாள்ல 3 போட்டிகள்... அப்பப்பா..? அதுக்குள்ள இவ்ளோ சாதனைகள்...!! வாரே வாஹ்..!! 2 நாள்ல 3 போட்டிகள்... அப்பப்பா..? அதுக்குள்ள இவ்ளோ சாதனைகள்...!! வாரே வாஹ்..!!

பண்ட் துவம்சம்

பண்ட் துவம்சம்

உலகின் நம்பர் 1 பவுலரும், டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவருமான பும்ராவின் பந்துவீச்சையே அடித்து துவம்சம் செய்துவிட்டார் பண்ட். 214 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பும்ராவுக்கு காயம்

பும்ராவுக்கு காயம்

டெல்லி கேபிடள்ஸ் அணியின் பேட்டிங்கின் போது, அந்த இன்னிங்ஸின் கடைசி பந்தை பும்ரா வீசினார். அதை தடுக்க முயற்சிக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

காயத்தால் கவலை

காயத்தால் கவலை

அவரை அணியின் மருத்துவக்குழுவினரும், சகவீரர்களும் அழைத்து சென்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே நம்பியிருந்த மலிங்கா மற்றும் ஆடம் மில்னே ஆடாதது பின்னடைவாக உள்ளது.இந்த தருணத்தில் டெத் ஓவர் மன்னர் பும்ராவின் காயம் அனைவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

நிர்வாகம் சோகம்

நிர்வாகம் சோகம்

மும்பை இந்தியன்சுக்கு பெரிய இழப்பில்லை என்று சொல்லலாம். ஆனால் உலக கோப்பை தொடர் வர உள்ள நிலையில், நட்சத்திர பவுலர் பும்ராவின் காயம், அணி நிர்வாகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தகவல் இல்லை

தகவல் இல்லை

ஆனால் பும்ராவிற்கு பெரிய காயம் இல்லை என்றும் அதனால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் அடுத்த போட்டியில் பும்ரா ஆடுவது குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்பட வில்லை.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை அணி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதோ இல்லையோ இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. அப்புறம் என்ன.. உலக கோப்பை தொடரில் நம்ம பும்ரா இருக்காரு.. கவலையே படவேண்டாம்.

Story first published: Monday, March 25, 2019, 17:00 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
Indian Cricket Pacer Jasprit Bumrah Declared Fit Amidst Injury Scare For World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X