For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 ஆண்டுகளாக.. ஒரு கோப்பை கூட இல்லை.. தொடரும் இந்திய அணியின் "ஃபைனல்" சோகம்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி தோற்றிருப்பதன் மூலம், ஐசிசி-யின் மிக முக்கிய தொடர்களின் இறுதி அல்லது அரையிறுதிப் போட்டியில் தோற்பது மீண்டும் தொடர் கதையாகியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஆறாவது நாள் (ரிசர்வ் டே) ஆட்டம் நேற்று (ஜூன்.23) நடைபெற்றது. இதில், இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது.

5 வருடத்திற்கு முன் நடந்த அதே சம்பவம்.. ஜூஸ் குடிக்கும் கேப்பில்..முகமது ஷமியிடம் கோலி கூறிய ப்ளான்!5 வருடத்திற்கு முன் நடந்த அதே சம்பவம்.. ஜூஸ் குடிக்கும் கேப்பில்..முகமது ஷமியிடம் கோலி கூறிய ப்ளான்!

அதேசமயம், ஐசிசி தொடர்களில் முக்கியமான போட்டிகளில் இந்திய அணி தோற்பது தொடர்கதையாகியுள்ளது. 7 ஆண்டுகளாக இந்தியா வசம் எந்த முக்கிய கோப்பைகளும் இல்லை என்பதே உண்மை.

 நியூசிக்கு வாய்ப்பு

நியூசிக்கு வாய்ப்பு

கிட்டத்தட்ட 2 வருட பயணம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தியா உள்ளிட்ட அனைத்து அணிகளும் விளையாடிய காலங்கள் இது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு டெஸ்ட் போட்டிகளை வென்று, தொடர்களை வென்று, படாதபாடுபட்டு இறுதிப் போட்டிக்குள் அணியை கொண்டு வந்தார் கேப்டன் விராட் கோலி. ஆனால், இவ்வளவு போராடியும் கடைசியில் இந்திய அணி கோப்பையை நழுவ விட்டிருக்கிறது. நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஏந்தியுள்ளது.

 தொடர் தோல்வி

தொடர் தோல்வி

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், கடந்த 7 ஆண்டுகளாக, இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பைகளையும் வெல்லவில்லை என்பது தான். ஆம்! கடந்த 2014 ஆண்டு முதல், இந்திய அணி ஐசிசியின் மிகப்பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும், கோப்பையை வெல்லவில்லை. அரையிறுதிப் போட்டி அல்லது இறுதிப் போட்டி வரை முன்னேறி, தோற்கும் அவலம் இப்போதும் நீடிக்கிறது.

 சோக பயணம்

சோக பயணம்

2014ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோற்றது முதல் தொடங்கியது இந்த சோக படலம். அதன் பிறகு, 2015 உலகக் கோப்பை தொடர் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி, 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இன்டீஸிடம் தோல்வி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி, 2019 உலகக் கோப்பைத் தொடர் அரையிறுதிப் போட்டியில் இதே நியூஸிலாந்திடம் தோல்வி, இப்போது 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் மீண்டும் நியூஸிலாந்திடம் தோல்வி என இந்தியாவின் சோக பயணம் இன்னும் தொடருகிறது.

 அருமையான வாய்ப்பு

அருமையான வாய்ப்பு

எனினும், அணி மீதுள்ள இந்த கரையை இந்த வருடமே துடைக்க இந்தியாவுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது. இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. அதில், வெற்றிப் பெறும் பட்சத்தில், விராட் கோலி தன் மீதான 'கேப்டன்சி' விமர்சனத்தை நிச்சயம் துடைக்கலாம்

Story first published: Thursday, June 24, 2021, 13:55 [IST]
Other articles published on Jun 24, 2021
English summary
india's losing streak continuing icc trophies - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X