For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த 2 ஆண்டுகள் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்.. முழு விவரம் இதோ.. ஆஸி உடன் இத்தனை முறையா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பங்கேற்கும் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Recommended Video

India அணியின் கேப்டன் Rohit Sharma ODI Cricket விமர்சனம் பற்றி பதிலடி *Cricket

இதில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எந்த மாதத்தில் எத்தனை போட்டி எந்த நாட்டுடன் நடைபெறும் என்ற தகவல் மட்டும் இடம்பெற்றிருக்கிறது.

2024-2027ஆம் ஆண்டு வரை இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்.. கோலி, ரோகித் ஓய்வு பெறும் தொடர் எது ? 2024-2027ஆம் ஆண்டு வரை இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்.. கோலி, ரோகித் ஓய்வு பெறும் தொடர் எது ?

போட்டிகளுக்கான தேதி மற்றும் எந்த மைதானங்களில் நடைபெறும் போன்ற தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.

கேகேஆர் அணி எனக்கு பணம் தர வேண்டும்.. இர்பான் தான் போட்ட அதிர்ச்சி டிவிட்.. என்ன நடந்தது?கேகேஆர் அணி எனக்கு பணம் தர வேண்டும்.. இர்பான் தான் போட்ட அதிர்ச்சி டிவிட்.. என்ன நடந்தது?

நடப்பாண்டு தொடர்

நடப்பாண்டு தொடர்

அதன்படி நடப்பாண்டில் இந்திய அணி செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் மூன்று டி20 போட்டிகளும் தென்னாப்பிரிக்காவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளும் இந்தியா விளையாடுகிறது.இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நியூசிலாந்து செல்லும் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

2023ஆம் ஆண்டு

2023ஆம் ஆண்டு

இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு செல்லும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது சொந்த மண்ணில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.அதன் பிறகு நியூசிலாந்தை மூன்று ஒரு நாள் மட்டும் மூன்று டி20 போட்டிகளில் ஜனவரி மாதம் இந்தியா எதிர்கொள்கிறது.

2023 ஆஸ்திரேலிய பலப்பரீட்சை

2023 ஆஸ்திரேலிய பலப்பரீட்சை

அதன்பிறகு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுடன் நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்தியா தனது சொந்த மண்ணில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதன்பிறகு ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணி மீண்டும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடுகிறது.

ஐசிசி உலக கோப்பை

ஐசிசி உலக கோப்பை

இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் ஐசிசி உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவை ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி உள்ளூரில் எதிர் கொள்கிறது. தொடர்ந்து டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது.

Story first published: Friday, August 19, 2022, 19:51 [IST]
Other articles published on Aug 19, 2022
English summary
Indian cricket team schedule for Next two years till 2023 – Full details hereஅடுத்த 2 ஆண்டுகள் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்.. முழு விவரம் இதோ.. ஆஸி உடன் இத்தனை முறையா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X