For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து புறப்பட்டு சென்ற இந்திய அணி.. துணை கேப்டன் வரவில்லை.. சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு

மும்பை: இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க செல்கிறது.

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்தக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்குகிறது.

டிராவிட்-க்கு இந்த நிலைமையா..?? ஃபார்முலாவை மீறி எடுத்த அதிரடி முடிவு.. 3 முக்கிய வீரர்களுக்கு ஆப்புடிராவிட்-க்கு இந்த நிலைமையா..?? ஃபார்முலாவை மீறி எடுத்த அதிரடி முடிவு.. 3 முக்கிய வீரர்களுக்கு ஆப்பு

ஒரு டெஸ்ட் போட்டிக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தொடரை வெல்லுமா இந்தியா

தொடரை வெல்லுமா இந்தியா

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2 விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா போன்ற சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சுமார் 2 வார ஓய்வுக்கு பிறகு தற்போது இந்திய அணி வீரர்கள் மும்பையிலிருந்து, துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இந்தப் போட்டியை இந்திய அணி டிரா செய்தாலே தொடரை 2க்கு1 என்ற கணக்கில் வென்றுவிடும்.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இதனால், இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில், தற்போது இங்கிலாந்து புறப்பட்டுள்ள இந்திய அணி, 3 நாள் தனிமையில் இருப்பார்கள். கொரோனா நெகட்டிவ் வந்த உடன், இந்திய 3 நாட்கள் சிறப்பு பயிற்சியில் ஈபட உள்ளனர். இதனைத் தொடாந்து வரும் 24ஆம் தேதி லெய்ஷிஸ்டர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.

ஜூலை 1ஆம் தேதி

ஜூலை 1ஆம் தேதி

இதில், களமிறங்கும் வீரர்கள் ஒரு அளவுக்கு மனதளவில் இங்கிலாந்து போட்டிக்காக தயாராகி விடுவார்கள். தனைத் தொடர்ந்து இந்திய அணி எட்பாஸ்டன் சென்று அங்கு ஒரு நாள் ஓய்வில் இருக்கும். அதன் பிறகு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்து அணி தற்போது பலமான அணியாக விளங்குகிறது.

ராகுல் இல்லை

ராகுல் இல்லை

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று, தற்போது 3வது போட்டிக்காக தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது இந்தியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.மேலும் இந்திய அணியின் துணை கேப்டன் ராகுல் இல்லாமல், இந்திய அணி இங்கிலாந்தக்கு புறப்பட்டு சென்றுள்ளது. ராகுலுக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

Story first published: Thursday, June 16, 2022, 14:41 [IST]
Other articles published on Jun 16, 2022
English summary
Indian cricket team started their journey to England will play practice test இங்கிலாந்து புறப்பட்டு சென்ற இந்திய அணி.. துணை கேப்டன் வரவில்லை.. சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X