வணக்கம் டா மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து... ஃபுளோரிடாவில் இந்திய அணி.. வருகிறார் ரோகித் சர்மா

அமெரிக்கா: மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், கடைசி 2 டி20 போட்டியில் இந்திய அணி, அமெரிக்கா சென்று விளையாடுகிறது.

இதற்கான விசா பிரச்சினை தீர்ந்த நிலையில், இந்திய அணி நேற்று புளோரிடா சென்றது.

தற்போது அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியில் ஈடுபட்டனர். காயம் காரணமாக 3வது போட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய ரோகித், தனது உடல் தகுதியை எட்டியுள்ளார்.

ரோகித் சர்மாவின் உடல் நலத்தை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு விளையாட கிரின் சிக்னல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ரோகித் சர்மாவும் பயிற்சியில் ஈடுபட்டார்.

நாளைய போட்டியில் நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் விளையாடுகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜாவும் நாளைய போட்டியில் களம் காண்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian cricket team started their training in florida வணக்கம் டா மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து... ஃபுளோரிடாவில் இந்திய அணி.. வருகிறார் ரோகித் சர்மா
Story first published: Friday, August 5, 2022, 23:53 [IST]
Other articles published on Aug 5, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X