For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பா மாதிரி நீயும் ஆட்டோ ஓட்டு..!! இந்திய வீரர் முகமது சிராஜை காப்பாற்றிய கோலி..!! வெளிவராத உண்மை..

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது வாழ்க்கையில் மறக்க வேண்டிய நாட்கள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Recommended Video

மோசமாக பேசிய ரசிகர்கள்.. காப்பாற்றிய Virat Kohli.. Mohamed Siraj சொன்ன தகவல்

முகமது சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர். தனது மகனை எப்படியாவது கிரிக்கெட் வீரராக காண வேண்டும் என்று கடைசி வரை உழைத்தவர்

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனைஇந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனை

மகனுக்காக அவ்வளவு கஷ்டப்பட்ட அவரது தந்தை இறந்த போது, அவரது முகத்தை கூட பார்க்காமல், நாட்டுக்காக விளையாடினார் சிராஜ். இந்த நிலையில் சிராஜ் அளித்துள்ள பேட்டியை தற்போது காண்போம்

கடினமான நாட்கள்

கடினமான நாட்கள்

2017ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாடினேன். முதல் போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசி 50 ரன்களுக்கு மேல் கொடுத்தேன். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானேன், என்னை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கோபமாக திட்டினார்கள். ஒரு சிலர் நீ ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய். அப்பாவை போல் ஆட்டோ ஓட்டு போ என்றார்கள்

கிரிக்கெட் வாழ்க்கை முடிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிவு

2017 மற்றும் 18ஆம் ஆண்டு எனக்கு மோசமாகவே அமைந்தது. ஐ.பி.எல். தொடரில் நான் சிறப்பாக செயல்படவில்லை. இந்தியாவுக்காக விளையாட கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை. பெங்களூரு அணி என்னை மீண்டும் தக்க வைக்காது என்று நினைத்தேன். கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான் என்று எண்ணி, மனதளவில் தொய்வாக இருந்தேன்

கோலியின் ஆதரவு

கோலியின் ஆதரவு

ஆனால், என்னை அணியிலிருந்து நீக்காமல் விராட் கோலி தக்க வைத்து கொண்டார். எனக்கு ஊக்கம் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்தார். எனக்கு திறமை உள்ளது, பயிற்சி செய் என்று வழிக்காட்டினார். அதன் மூலம் தான் என் வாழ்நாளில் கடினமான கட்டத்தை தாண்டினேன். விராட் கோலி எனக்கு சகோதரர் போன்றவர். விராட் கோலியை எங்கள் வீட்டுக்கு அழைத்தேன். அவரும் வந்து உணவருந்தி எனது பெற்றோரை பார்த்தார் என்று அந்த பேட்டியில் முகமது சிராஜ் கூறினார்.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

இந்த நிலையில், விராட் கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிராஜ், என்னுடைய சூப்பர் ஹீரோவுக்கு நன்றி. எனக்கு ஒரு சகோதரன் போல் இருந்து ஊக்கமும், நம்பிக்கையும் அளித்தீர்கள். என் கடினமான நாட்களில் கூட என் திறமையை கண்டறிந்து ஆதரவு அளித்தீர்கள். என்றுமே நீங்கள் தான் என் கேப்டன் என்று குறிப்பிட்டுள்ளார்

Story first published: Tuesday, January 18, 2022, 17:04 [IST]
Other articles published on Jan 18, 2022
English summary
Indian cricketer Mohammed siraj opens about How kohli supported his tough daysஅப்பா மாதிரி நீயும் ஆட்டோ ஓட்டு..!! இந்திய வீரர் முகமது சிராஜை காப்பாற்றிய கோலி..!! வெளிவராத உண்மை..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X