For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா இது பிக் பாஸ் மாதிரி இருக்கு.. வீட்டிலேயே சிக்கிய இந்திய வீரர்கள்.. “ஆப்பு” வைத்த பிசிசிஐ!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு லாக்டவுன் காலத்தில் வரிசையாக பிக் பாஸ் போல "டாஸ்க்" கொடுத்து வருகிறது பிசிசிஐ.

Recommended Video

BCCI launched an app for Indian cricketers to practice

இதற்கென தனி செயலியை உருவாக்கி ஆப்பு வைத்துள்ளது பிசிசிஐ. இந்திய வீரர்கள் தினமும் செய்யும் பயிற்சிகள் இந்த செயலியில் பதிவாகும் என்று கூறப்படுகிறது.

இந்த செயலி மூலம் இந்திய வீரர்களை பயிற்சியாளர்கள் குழு இயக்கி வருகிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இதன் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்.

ஐபிஎல் நடக்கணும்னு வேண்டிக்கோங்க... இல்லன்னா ஊதிய குறைப்புதான் ஐபிஎல் நடக்கணும்னு வேண்டிக்கோங்க... இல்லன்னா ஊதிய குறைப்புதான்

கிரிக்கெட் முடக்கம்

கிரிக்கெட் முடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் உலகின் முன்னணி அணிகள் அனைத்தும் அளவுக்கு அதிகமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தன. அந்த அணிகள் அனைத்தும் தற்போது முடங்கி உள்ளன.

சமூக வலைதளத்தில் கிரிக்கெட் வீரர்கள்

சமூக வலைதளத்தில் கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் வீரர்கள் லாக்டவுனில் வீட்டில் தனிமையில் உள்ளனர். இந்திய வீரர்கள் இதுவரை சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி பொழுதை போக்கி வந்தனர். அதற்கு கிட்டத்தட்ட முடிவு கட்டி உள்ளது பிசிசிஐ.

ஆஸ்திரேலியா தொடர்

ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா அடுத்ததாக வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட். ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. அதுவரை இந்திய வீரர்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்கள் பார்மை இழக்க நேரிடும்.

கடுமையான பயிற்சி

கடுமையான பயிற்சி

அதனால், இந்திய வீரர்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு வீட்டிலேயே வைத்து கடுமையாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது பிசிசிஐ. நான்கு கட்டங்களாக அடுத்த இரு மாதங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கட்டமாக பயிற்சியின் அளவை உயர்த்தவும், இதன் முடிவில் வீரர்களை மைதானத்தில் பயிற்சி செய்ய வைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

பயிற்சிகள் பதிவு செய்யப்படும்

பயிற்சிகள் பதிவு செய்யப்படும்

அதன்படி முதற்கட்டமாக வீரர்கள் தற்போது பயிற்சி செய்ய என்னென்ன வசதிகள் உள்ளன என கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் அந்த செயலியில் பதிவாகும். மேலும், பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வீரருக்கும் பல்வேறு பயிற்சிகளை செய்யுமாறு கூற உள்ளனர்.

வீடியோக்கள்

வீடியோக்கள்

ஒவ்வொரு வீரரின் பலம், பலவீனத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் எங்கே முன்னேற வேண்டும் என வீடியோக்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு 15 நாள் முடிவிலும் பயிற்சியின் அளவு அதிகரிக்கவும் திட்டம் உள்ளது.

மைதானத்தில் சிறப்பு பயிற்சி

மைதானத்தில் சிறப்பு பயிற்சி

வீரர்கள் தங்கள் வீட்டிலேயே நான்கு கட்ட பயிற்சிகள் செய்த பின், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பட்சத்தில் வீரர்கள் மைதானத்தில் சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க வைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய வீரர்கள் லாக்டவுனில் தங்கள் பார்மை இழக்காமல் இருக்க முடியும் என பிசிசிஐ கருதுகிறது.

Story first published: Friday, May 15, 2020, 18:12 [IST]
Other articles published on May 15, 2020
English summary
BCCI launched an app for Indian cricketers to practice during lockdown. This will help them to prepare themselves for australia tour and also will protect them from losing touch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X