For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்மகிட்ட டைனமெட் போன்ற பவுலர்ஸ் இருக்காங்க..! உலக கோப்பை இந்தியாவுக்கே…! சொல்லும் அந்த பிரபலம்

மும்பை: உலக கோப்பையில் எதிரணி பேட்ஸ்மேன்களை டைனமைட் போன்று செயல்பட்டு இந்திய அணி பவுலர்கள் ஆட்டமிழக்கச் செய்வார்கள் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறி உள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 தொடங்குகிறது. இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்க புறப்பட்டு சென்றிருக்கிறது. இது கோலி பங்கேற்கும் 3வது உலக கோப்பை.

Indian fast bowling unit is a dynamite says former bowler venkatesh prasad

தொடருக்கு முன்பாக வரும் 25ம் தேதி நியூஸிலாந்துடனும், 28ம் தேதியன்று வங்க தேசத்துடனும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்நிலையில் எதிரணி பேட்ஸ் மேன்களை டைனமைட் போன்று செயல்பட்டு இந்திய அணி பவுலர்கள் ஆட்டமிழக்கச் செய்வார்கள் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறி உள்ளார்.

சும்மா அவரோட என்னை கம்பேர் பண்ணாதீங்க..அவர் வேற... நான் வேற...! பொங்கிய விஜய் சங்கர் சும்மா அவரோட என்னை கம்பேர் பண்ணாதீங்க..அவர் வேற... நான் வேற...! பொங்கிய விஜய் சங்கர்

அவர் மேலும் கூறியிருப்பதாவது:இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி வீரர்கள் சாதிக்க வேண்டும். அதற்கு முக்கியம்.... பேட்ஸ்மென்களை விட பவுலர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டும். அதில் இந்திய அணி சிறப்பாக உள்ளது.

ஏன் என்றால், உலக தரம் வாய்ந்த முகமது சமி, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய பவுலர்கள் நம்மிடம் இருக்கின்றனர். ஸ்விங் செய்து பந்துகளை வீசவதில் புவனேஷ்வர் கில்லாடி.

சமி, அசுர வேகத்தில் பந்து வீசுவார். பும்ரா... ஒரு யார்க்கர் சூப்பர் ஸ்டார். இந்த 3 பேரையும் எதிரணியினர் சமாளிப்பதே மிக கடினம். ஏன் என்றால் அவர்கள் தான் எதிரணி பேட்ஸ் மேன்களுக்கு மிகப்பெரிய டைனமைட்கள் என்றார்.

Story first published: Wednesday, May 22, 2019, 18:23 [IST]
Other articles published on May 22, 2019
English summary
Indian fast bowling unit is a dynamite says former bowler venkatesh prasad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X