For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவே போதும்…! அணியில் இருந்து விடைபெறுகிறேன்..! அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்

பெங்களூரு: முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும், கர்நாடக கிரிக்கெட் வீரருமான வினய் குமார், கர்நாடகா ரஞ்சி கிரிக்கெட் அணியில் இருந்து விடை பெற்றுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார். வயது 35. இந்திய அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். கர்நாடக ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் வினய், அந்த அணியின் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில்,கர்நாடக ரஞ்சி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

15 ஆண்டுகாலம்

15 ஆண்டுகாலம்

கர்நாடக கிரிக்கெட்டுக்கு விடைசொல்லும், இந்த முடிவை நான் மிகுந்த கவனத்துடன் எடுத்திருக்கிறேன். எனது 15 ஆண்டுகால பயணம் அற்புதமானது, மறக்கமுடியாதது.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்கள் கே.எஸ்.சி.ஏ நிர்வாகம் , எனது மூத்த வீரர்கள், எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் தங்கள் அன்பையும் ஆதரவையும் எனக்குக் காட்டியுள்ளனர் என்றார்.

யார் ஆலோசகர்?

யார் ஆலோசகர்?

புதுச்சேரி அணிக்கு மாற உள்ளேன். வெஸ்ட் இண்டீசின் முன்னாள் வீரர் ஆல்வின் காளிச்சரம் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார். கர்நாடகா முன்னாள் பேட்ஸ் மேன் ஜே அருண் குமார் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார் என்று கூறினார்.

கர்நாடக கேப்டன்

கர்நாடக கேப்டன்

வினய் குமார் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2013-14, 2014-15 ரஞ்சி டிராபியில் கர்நாடக அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

Story first published: Wednesday, August 21, 2019, 23:50 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
Former indian pace bowler and karnataka cricketer vinay kumar announced his retirement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X