2021 டி20 உலக கோப்பை ஆடியவர்கள்.. இப்போது காணாமல் போய்விட்டனர்..!! பி.சி.சி.ஐ.யின் புரியாத புதிர்..!

மும்பை: கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

எதிர்காலத்திற்கு தயார் செய்யும் விதமாக தேர்ந்து எடுக்கப்பட்ட வீரர்கள், ஒரே தொடரில் தூக்கி வீசப்பட்டனர்.

அப்படி எந்த வீரர்கள் தூக்கி எறியபட்டனர், அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறதா என்பதை தற்போது காணலாம்.

வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான இந்திய ஒருநாள், டி20அணி அறிவிப்பு- ஷாருக்கானுக்கு இடமில்லை, அணி விவரம் இதோவெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான இந்திய ஒருநாள், டி20அணி அறிவிப்பு- ஷாருக்கானுக்கு இடமில்லை, அணி விவரம் இதோ

வருண்சக்ரவர்த்தி

வருண்சக்ரவர்த்தி

தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கடந்த ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் சோபிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது வரை அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ராகுல் சாஹர்

ராகுல் சாஹர்

இந்திய அணியின் லெக் ஸ்பின்னராக வலம் வந்த ராகுல் சாஹர் கடந்த ஆண்டு முழுவதும் வாய்ப்பு வழங்கப்பட்டு தயார் படுத்தப்பட்டார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் தனது முழு திறமையையும் ராகுல் சாஹர் காட்டவில்லை. இதனையடுத்து அவரும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அஸ்வின்

அஸ்வின்

கடந்த டி20 உலகக் கோப்பை, அதன் பிறகு நடைபெற்ற நியூசிலாந்து தொடர் என அஸ்வின் இந்திய டி20 அணிக்கு திரும்பினார். ஆனால் திடீரென்று இம்முறை தேர்வுக்குழுவினர் நீக்கிவிட்டனர். அவருக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானாலும், தேர்வுக்குழுவினர் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. இதனால் மீண்டும் அவர் டி20 அணிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

India's Predicted ODI,T20I Squads Against WI! Rohit to Return, Ashwin may Miss | OneIndia Tamil
நடராஜன்

நடராஜன்

தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயார் செய்யும் விதமாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் காயம், கொரோனா பாதிப்பு என தற்போது அவர் இந்திய அணி பக்கமே இல்லை. இதனால் கடந்த உலகக் கோப்பையில் நடராஜன் விளையாடவில்லை. ஆனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian Players Who Played in T20 World cup missing in T20 Squad vs WI2021 டி20 உலக கோப்பை ஆடியவர்கள்.. இப்போது காணாமல் போய்விட்டனர்..!! பி.சி.சி.ஐ.யின் புரியாத புதிர்..!
Story first published: Thursday, January 27, 2022, 12:44 [IST]
Other articles published on Jan 27, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X