ஆஸ்திரேலியாவுக்கு இந்திய வீரர்கள் வந்தா கண்டிப்பா இதைச் செய்தாகணுமாம்!

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு வருவதாக இருந்தால் அங்கு அவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்களாம். ஆஸ்திரேலிய அரசின் விதிமுறைப்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமாம்.

IPL 2020 Could Start From September 19

அனேகமாக இந்திய வீர்ரகள் அடிலைட் ஓவல் மைதானத்தில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. மேலும் இதே மைதானத்திலேயே இந்திய வீர்ரகளுக்கு பயிற்சியும் எடுத்துக் கொள்ள முடியும். குவாரன்டைன் சமயத்திலும் கூட இவர்களால் பயிற்சியில் ஈடுபட முடியுமாம்.

வெளிநாடுகளிலிருந்து வருவோர் கட்டாயம் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது ஆஸ்திரேலிய அரசின் உத்தரவாகும். எனவே அதற்கேற்ப இந்திய வீரர்களும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்தியா -ஆஸ்திரேலியா இடையே டிசம்பர் மாதத்தில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக தற்போதே ஆயத்தப் பணிகள் ஆரம்பித்து விட்டன.

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில்.. நம்பர் ஒன் ஆனார் பென் ஸ்டோக்ஸ்

ஆனால் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்களுக்கு 14 நாள் தனிமை என்பது அதிகம். எனவே அதை சற்றுக் குறைக்க முன்வர வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் டிசம்பர் 3ம் தேதி தொடங்கவுள்ளது.

பார்க்கலாம்.. குறைப்பார்களா அல்லது கட்டாயம் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என உத்தரவிடுவார்களா என்பதை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian Cricket players will be quarantined for 14 days when they visit Australia -CA
Story first published: Tuesday, July 21, 2020, 19:16 [IST]
Other articles published on Jul 21, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X