For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரசிகர்களே குறிச்சு வச்சுக்கோங்க… ஐபிஎல் எத்தனை மணிக்கு தொடங்குது தெரியுமா?

மாலை 4 மற்றும் இரவு 8 மணிக்கு ஐபிஎல் போட்டி… பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி:ஐபிஎல் 2019 லீக் ஆட்டங்கள் அனைத்தும் மாலை 4 மற்றும் இரவு 8 மணிக்கு தொடங்கும் என்று பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2019 போட்டி 12வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன.

இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டங்களை, முன்னரே 7 மணிக்கு தொடங்க வேண்டும் என்று பிசிசிஐக்கு பல்வேறு தரப்பினர் கோரியிருந்தனர். ஆனால் பெரும்பாலான அணிகள் இரவு 8 மணிக்கே போட்டியை தொடங்க வேண்டும் என வாரியத்திடம் கூறின.

நீண்ட தூரம் சிக்சர் அடித்தவர் யார்? நம்ம தல தான் அதிலும் பர்ஸ்ட்.. வீடியோவை பாருங்க... புரியும் நீண்ட தூரம் சிக்சர் அடித்தவர் யார்? நம்ம தல தான் அதிலும் பர்ஸ்ட்.. வீடியோவை பாருங்க... புரியும்

கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

இதற்கிடையே பிசிசிஐ சிஓஏ கூட்டம் நடைபெற்றது. அதற்கு பின்னர் வினோத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இரவு ஆட்டங்கள் 8 மணிக்கே தொடங்கும். பகல் ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கும்.

7 மணிக்கு தொடங்கும்

7 மணிக்கு தொடங்கும்

கடந்த ஆண்டும் இதே போல் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் எதிர்பார்ப்பு எழுந்தது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் 8 மணிக்கு தான் நடைபெற்றன.

முதல் கட்ட போட்டிகள்

முதல் கட்ட போட்டிகள்

பிளே ஆஃப் மற்றும் இறுதி ôட்டங்கள் மட்டுமே 7 மணிக்கு தொடங்கின. ஐபிஎல் முதல் கட்டப் போட்டி அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டாம் கட்ட போட்டி அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

ஐசிசிக்கு வலியுறுத்தல்

ஐசிசிக்கு வலியுறுத்தல்

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தற்போதும் நாங்கள் ஐசிசிக்கு வலியுறுத்தியுள்ளோம். நமது கோரிக்கை தீவிரமாக முன்வைக்கப்பட்டுள்ளது. சீக்கிரம் அதன் முடிவு என்னவென்று தெரிய வரும்.

நடைமுறை பின்பற்றப்படும்

நடைமுறை பின்பற்றப்படும்

ஜூன் 16ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ஆட்டத்தை புறக்கணிப்பது தொடர்பாக உரிய நடைமுறை பின்பற்றப்படும். மேலும் ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் வாடாவில் இணைவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று வினோத் ராய் கூறினார்.

Story first published: Friday, March 8, 2019, 13:29 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
All league games of the Indian Premier League beginning March 23 will start at the usual prime time spot of 8 pm, said chief Vinod Rai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X