For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆமா… அவரு 3 டி பிளேயர் தான்… என்ன பண்ண போறீங்க…? விஜய் சங்கருக்காக பொங்கும் கேப்டன்

மும்பை:உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் நான்காம் இடத்தில் களமிறங்க விஜய் சங்கர் தகுதியான வீரர் என கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது.கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக இருந்தாலும், இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளுக்குமே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. உலக கோப்பைக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

அடப்பாவமே! வெளுத்துக் கட்டிய மொயீன் அலி.. மனமுடைந்து.. சோர்ந்து.. கண்கலங்கிய குல்தீப் யாதவ்!! அடப்பாவமே! வெளுத்துக் கட்டிய மொயீன் அலி.. மனமுடைந்து.. சோர்ந்து.. கண்கலங்கிய குல்தீப் யாதவ்!!

வெடித்த சர்ச்சைகள்

வெடித்த சர்ச்சைகள்

ஆனால்.... அதில் பல சர்ச்சைகளும் வெடித்துள்ளன. குறிப்பாக... ராயுடு சேர்க்கப்படாமல், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ராயுடுவும், ஓஜாவும் மாறி, மாறி பிசிசிஐ மீது புகார் கூறி வருகின்றனர்.

முப்பரிணாம வீரர்

முப்பரிணாம வீரர்

அணி தேர்வு குறித்த அறிவிப்பின் போது, தேர்வுக்குழு தலைவர் பிரசாத், விஜய் சங்கர் ஒரு 3டி பிளேயர் என்று வர்ணித்தார். அதற்கு பதிலடியாக உலக கோப்பையை பார்க்க இப்போதுதான் 3டி கண்ணாடிகள் ஆர்டர் செய்தேன் என்று அம்பத்தி ராயுடு கேலியுடன் தமது டுவிட்டரில் பதிவு செய்தார்.

முயற்சித்தோம்

முயற்சித்தோம்

இந்நிலையில் விஜய் சங்கர் குறித்து விராட் கோலி கூறி இருப்பதாவது: நிறைய அணி சேர்க்கைகளை முயற்சி செய்தோம். சிலபல வீரர்களை சோதித்தோம். ஆனால் விஜய் சங்கர் வந்தவுடன் 3டி ஆகிவிட்டது. பவுலிங், பேட்டிங் மற்றும் நன்றாக பீல்டிங்கும் செய்வார்.

விஜய் சங்கர் திறமையானவர்

விஜய் சங்கர் திறமையானவர்

அவர் திறமையான பேட்ஸ்மென். மற்ற அணிகள் சமச்சீரான வகையில், வீரர்களை தேர்வு செய்யும் போது ஏன் பிசிசிஐயும் செய்யக் கூடாது. அதற்காக தான் விஜய் சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்றார் கோலி.

Story first published: Saturday, April 20, 2019, 11:25 [IST]
Other articles published on Apr 20, 2019
English summary
Indian skipper Virat Kohli also terms Vijay Shankar a three-dimensional player.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X