For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி இத மட்டும் செஞ்சா போதும்.யாரும் செய்யாத மெகா சாதனையை படைக்கலாம்..எகிறும் எதிர்பார்ப்பு

அகமதாபாத்: 4வது டெஸ்டில் பாண்டிங்கின் மிகப்பெரிய சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைக்க கோலிக்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் வரும் மார்ச் 4ம் தேதி அகமதாபாத்தில் உள்ள மொய்தீரா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு! சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு!

இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் பேட்டிங்கில் மிகப்பெரும் சாதனையை படைக்க விராட் கோலிக்கு ஒரே ஒரு சதம் மட்டுமே தேவையாகவுள்ளது.

விராட் கோலி

விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இதுவரை 2 அரை சதங்கள் அடித்துள்ளார். ஆனால் அதனை சதமாக மாற்ற அவரால் முடியவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 4வது டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த கேப்டனாக கோலி சாதனை படைப்பார்.

ஜாம்பவான்

ஜாம்பவான்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்களின் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி இருவரும் 41 சதங்களுடன் சமநிலையில் உள்ளனர். எனவே கோலி அடுத்த போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில் 42 சதங்களுடன் முதலிடத்திற்கு முன்னேறுவார்.

சாதிப்பாரா கோலி

சாதிப்பாரா கோலி

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய அணி கேப்டன் கோலி கடைசியாக சதமடித்தார். அதன்பிறகு தற்போதுவரை ஒரு சதம் கூட எடுக்கவில்லை. டெஸ்டில் தொடர்ந்து 11 இன்னிங்ஸ்களாக மூன்று இலக்க ரன்களை எடுக்க முடியாமல் அவர் திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியை மிஞ்சிய கோலி

தோனியை மிஞ்சிய கோலி

நடைபெற்று முடிந்த 3வது டெஸ்டில் உள்ளூர் மைதானங்களில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன்களில் பட்டியலில் தோனியை பிண்ணுக்கு தள்ளி கோலி முதலிடத்தை பிடித்தார். தோனி தலைமையிலான இந்திய அணி 30 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 21 வெற்றிகளைப் பெற்றது. விராட் கோலி தலைமையில் 29 போட்டிகளில் 22 வெற்றிகளைக் குவித்துள்ளது.

Story first published: Tuesday, March 2, 2021, 15:36 [IST]
Other articles published on Mar 2, 2021
English summary
Indian Skipper Kohli have one century away for surpassing Ponting and creating world record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X