For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோசம்… மோசம்..! இந்த தம்பி இனிமே எதுக்கு? ஒரேடியாக கழற்றிவிட தயாராகும் கோலி..!!

Recommended Video

IND VS WI TEST 2019 | ராகுலுக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு!- வீடியோ

கிங்ஸ்டன்: பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்க போவதில்லை என்று கோலி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறைய வாய்ப்புகள் கொடுத்தாகி விட்டது. ஆனாலும் எல்லாம் தோல்விதான். எந்த பிரயோசனமும் இல்லை. இந்திய அணியில் உள்ள தவான், கேஎல் ராகுலின் நிலைமை இப்போது இப்படித் தான் இருக்கிறது.

சரியாக விளையாடாத காரணத்தால் முரளி விஜய்யும், தவானும் இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இல்லை. ஆனால் அவர்களை போலவே நீண்ட காலமாக பார்மில் இல்லாத ராகுல் தொடர்ந்து தடுமாறி கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து சான்ஸ்

தொடர்ந்து சான்ஸ்

ஆனால் திறமையை நிரூபிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து கொண்டிருக்கிறார் கேப்டன் கோலி. அதாவது, வெஸ்ட் இண்டீஸ் தொடரில், டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. 4 டெஸ்டுகளில் மொத்தமாக 4 இன்னிங்சில் எடுத்தது என்னவோ 101 ரன்கள் தான்.

14 இன்னிங்சில் அபாரம்

14 இன்னிங்சில் அபாரம்

அதிக பட்ச ரன்கள் 44 தான். ஒரு சமயத்தில் டெஸ்ட் தொடரில் கலக்கி எடுத்தவர் தான் இந்த ராகுல். 14 இன்னிங்சில் 10 அரை சதங்களை விளாசியவர். ஆனால் அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. அந்த டெஸ்டுகள் எல்லாம் பெரும்பாலும் இந்தியாவிலும் நடைபெற்றவை. 2 டெஸ்டுகள் இலங்கையிலும் நடைபெற்றன.

7 போட்டிகளில் சொதப்பல்

7 போட்டிகளில் சொதப்பல்

கடந்தாண்டு இங்கிலாந்தில் 5 டெஸ்டுகளிலும் விளையாடிய ராகுல் ஒரு சதம் மட்டும் எடுத்தார். மீதமுள்ள 9 இன்னிங்சும் கோவிந்தா ரகம் தான். கடைசி டெஸ்ட் அவரை காப்பாற்ற, மேலும் விளையாட வாய்ப்புகளை வழங்கினார் கோலி. அதன்பின்னர் விளையாடிய 7 டெஸ்டுகளிலும் ஒரு அரை சதம் கூட எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்டில் அவரை அணியில் சேர்க்கவில்லை.

சராசரி 22.23

சராசரி 22.23

பிரித்வி ஷா இல்லாத நிலையில், அந்த வாய்ப்பு மீண்டும் அவருக்கு வந்தது. அதையும் தற்போது வீணாக்கியுள்ளார். 2018க்கு பிறகு 15 டெஸ்டுகள் விளையாடி, சராசரி 22.23. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதமும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு அரை சதமும் எடுத்துள்ளார்.

கழற்றிவிட முடிவு

கழற்றிவிட முடிவு

2018க்கு முன்பு அவரது டெஸ்ட் சராசரி 44.62. ஆனால் இப்போது, 34.58. கிட்டத்தட்ட முழுக்கவே இறங்குமுகம் தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், அவருக்கு அதிர்ஷ்டம் கைகூடவில்லை. தொடர்ந்து சொதப்பல்தான். அது தான் இப்போது தேர்வுக் குழுவை ரொம்பவும் யோசிக்க வைத்துள்ளது. கோலியும் அடுத்து வரக்கூடிய டெஸ்ட் தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கலாம் என்று பிசிசிஐக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Story first published: Monday, September 2, 2019, 19:07 [IST]
Other articles published on Sep 2, 2019
English summary
Indian skipper kohli plans to drop kl rahul in future test series, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X