For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நல்ல வேளை…!அந்த பையன் காப்பாத்திட்டான்.. இல்லைன்னா கோவிந்தா தான்…! கோலி கைகாட்டும் அந்த நபர்

புளோரிடா: தனது கிரிக்கெட் பயணத்தை சிறப்பாக துவங்கியுள்ளார் சைனி என்று கேப்டன் கோலி பாராட்டி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரை மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணியுடன் மூன்று டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டி 20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிக பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. துவக்க வீரர்களான ஜான் கேம்பல் மற்றும் ஈவன் லீவிஸ் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

96 ரன்கள் இலக்கு

96 ரன்கள் இலக்கு

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் பொல்லார்டு (49), பூரன் (20) ஆகியோரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சொதப்பிய இந்தியா

சொதப்பிய இந்தியா

வெறும் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாட வில்லை. ரோகித் சர்மா 24 ரன்களும், கோலி மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் தலா 19 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு கைகொடுத்தனர்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அதன் மூலம் 17.2 ஓவர்கள் 6 விக்கெட் இழப்பிற்கு தட்டுதடுமாறி இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது .வெற்றி குறித்து கோலி, தனது அறிமுக போட்டியிலேயே ம3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நவ்தீப் சைனியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சைனி சிறப்பு

சைனி சிறப்பு

அவர் கூறியதாவது: உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த பிட்ச் மிகவும் மோசம். நவ்தீப் சைனி இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக செயல் பட்டார். அவரிடம் ஸ்பெஷலான விஷயங்கள் நிறைய உள்ளன.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

தமது கிரிக்கெட் பயணத்தை சிறப்பாக துவங்கியுள்ளார். அவர் இந்தியாவுக்காக பல போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும். அதன் தொடக்கம் தான் இது என்றார்.

Story first published: Sunday, August 4, 2019, 9:55 [IST]
Other articles published on Aug 4, 2019
English summary
Indian skipper praised young player navdeep saini against west indies t 20 match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X