For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொகாலி போட்டியில் 25 ஓவர்களில் 188 ரன்கள்… ஸ்பின் பவுலிங்கில் இந்தியா படுமோசம்

மொகாலி:இந்திய ஸ்பின் பவுலர்கள் 25 ஓவர்களில் 188 ரன்களை வாரி வழங்கியதே அணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

இந்தியா,ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் என்ற கடின இலக்கு. ஆனால் அதை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மொகாலி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஒத்த ஸ்டெம்பிங்.. உண்டு,இல்லை என்று பண்ணிய டர்னர்.. இப்ப புரிகிறதா தோனியோட அருமை ஒத்த ஸ்டெம்பிங்.. உண்டு,இல்லை என்று பண்ணிய டர்னர்.. இப்ப புரிகிறதா தோனியோட அருமை

அபாரமான ஆட்டம்

அபாரமான ஆட்டம்

அதன் பிறகு... கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்பும் இணைந்து அபாரமாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 192 ரன்களை குவித்தது. கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழக்க, ஹேண்ட்ஸ்கம்ப் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

டெத் ஓவர்களின் பலன்

டெத் ஓவர்களின் பலன்

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை கையில் எடுத்தது டர்னர். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர்களான புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரின் பவுலிங்கை அவர் வெளுத்து வாங்கினர்.

ரன் குவித்தார்

ரன் குவித்தார்

அதுவும் எப்படி தெரியுமா... வெறும் 43 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்தார் டர்னர். இத்தனைக்கும் மேக்ஸ்வெல் அவுட்டான பிறகு.. அதுவும் 37வது ஓவரில் தான்டர்னர் களத்துக்கே வந்தார்.அதன்பிறகு தான் அவரின் காட்டடி தொடங்கியது.

கட்டுக்கோப்பான பந்துவீச்சு

கட்டுக்கோப்பான பந்துவீச்சு

ஒரு கட்டத்தில் பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக இருந்த இந்திய அணி, அதன் பின்னர் தான் வாரி வழங்கியது. புவனேஷ்வர் குமார் 5 ஒவர்களில் 18 ரன்கள் தான் கொடுத்திருந்தார்.

பும்ரா 63 ரன்கள்

பும்ரா 63 ரன்கள்

அதன்பின்னர் டர்னரின் காட்டியால்.. 9 ஓவர்கள் 67 ரன்களை வாரி கொடுத்து விட்டு போனார். பும்ரா 8.5 ஒவர்களில் 63 ரன்கள் என்று அள்ளி கொடுத்தார்.

5 ஓவர்களிலும் ரன்கள்

5 ஓவர்களிலும் ரன்கள்

கேதார் ஜாதவுக்கு தாம் வீசிய 5 ஓவர்களிலும் ராசியில்லை. 2 ஓவர்களிலேயே அவரிடம் இருந்து பந்தை வாங்கி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மீண்டும் பந்தை தர... மொத்தம் 44 ரன்களை வாரி வள்ளலாக கொடுத்தார்.

80 ரன்கள் எதுக்கு?

80 ரன்கள் எதுக்கு?

அனைத்துக்கும் மேலாக தாராளமயமாக இருந்தவர் சாஹல். சும்மா சொல்லக் கூடாது. மொத்தம் வீசியது 10 ஓவர்கள்... கொடுத்ததோ 80 ரன்கள்.

ஸ்பின்னில் 188 ரன்கள்

ஸ்பின்னில் 188 ரன்கள்

குல்தீப் யாதவ் 10 ஒவர்களில் 64 ரன்களையும் கொடுத்தனர். ஸ்பின்னர்கள் சேர்ந்து 25 ஓவர்களில் 188 ரன்கள் வாரி வழங்கினர். அனைவரின் பந்தையும் பேட்டால் துவம்சம் செய்து அதிரடி காட்டினார் டர்னர்.

தொடரை வெல்ல வேண்டும்

தொடரை வெல்ல வேண்டும்

ஆக...உலக கோப்பைக்கு முந்தைய தொடர் என்பதை இந்தியா மனதில் கொள்ள வேண்டும். வாழ்வா, சாவா என்ற கடைசி போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்ற வேண்டும்.

Story first published: Monday, March 11, 2019, 12:10 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
One of the reasons for the team india's defeat was the Indian spin bowlers giving 188 runs in 25 overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X