For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரு சொல்றது அத்தனையும் சுத்த பொய்ங்க... அஸ்வினை கழுவி ஊத்தி காய வைத்த நம்ம வீரர்

மும்பை:மன்கட் முறையில் அவுட் செய்த அஸ்வின் பொய் சொல்கிறார் என்று முன்னாள் வீரர் பிரசன்னா கழுவி ஊற்றியிருக்கிறார்.

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி இன்னமும் கிரிக்கெட் உலகில் பேசப்படும் போட்டியாகி விட்டது. அந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்துவருகிறது.

அம்பயரை ரன் அவுட் செய்தார்!! பஞ்சாப் அணிக்கு பெரும் தலைவலியாக மாறிய அஸ்வின்! ஊசலாடும் கேப்டன் பதவி? அம்பயரை ரன் அவுட் செய்தார்!! பஞ்சாப் அணிக்கு பெரும் தலைவலியாக மாறிய அஸ்வின்! ஊசலாடும் கேப்டன் பதவி?

184 ரன்கள் குவிப்பு

184 ரன்கள் குவிப்பு

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, கெய்லின் அதிரடியான 79 ரன்கள், சர்ப்ராஸ் கானின் சாமர்த்திய பேட்டிங் காரணமாக 20 ஓவர் முடிவில் 184 ரன்களை குவித்தது. 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருந்தார்.

பஞ்சாப் திணறல்

பஞ்சாப் திணறல்

அவரை வீழ்த்தவே முடியாமல் பஞ்சாப் அணி திணறியது. 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 69 ரன்களை குவித்து மிரட்டலாக ஆடிக் கொண்டிருந்தார். அவரை எப்படி அவுட்டாக்குவது என்று பஞ்சாப் திணறி கொண்டிருந்தது. அப்போது, 13வது ஓவரை வீசிய அஸ்ஷ்வின், பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.

அவுட்டான பட்லர்

அவுட்டான பட்லர்

அஸ்வின் பந்துவீச வரும்போதே பட்லர் கிரீஸை விட்டு வெளியேறியிருந்தார். அதைக்கண்ட அஸ்வின் பந்தை போடாமல் ஸ்டம்பில் அடித்து பட்லரை ரன் அவுட் செய்தார். தேர்டு அம்பயரும் அதற்கு அவுட் கொடுத்தார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அதுதான் அந்த ஆட்டத்தின் திருப்புமுனை. அதன்பிறகு ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. அஸ்வினின் இந்த செயலை ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்திருந்தார்.

விளக்கம்

விளக்கம்

அந்த போட்டிக்கு பின்னர் அந்த சம்பவம் குறித்து பேசிய அஸ்வின், நடந்தது திட்டமிடப்பட்டது அல்ல, விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று விளக்கமளித்தார். ஆனால் அவரது விளக்கத்தை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அஸ்வின் சொல்வது பொய்

அஸ்வின் சொல்வது பொய்

இது குறித்து முன்னாள் வீரர் பிரசன்னா கூறியதாவது:அஸ்வினுக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறது. ஆனாலும்... அதை எப்படியாவது மறைக்க தொடர்ந்து முயற்சிக்கிறார். அவர் என்ன பண்ணினார் என்பதில் தெளிவு இல்லை. அஸ்வின் பொய் சொல்கிறார். உண்மையை சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 27, 2019, 22:29 [IST]
Other articles published on Mar 27, 2019
English summary
Rubbishing R. Ashwin’s statement that he ‘Mankaded’ Jos Buttler “instinctively”, Indian spin great Erapalli Prasanna said the India Test off-spinner is lying and should have cautioned the batsman.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X