For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சவால் விட்ட ஆப்கன் கேப்டன்.. தவிடுபொடியாக்கிய இந்திய சுழல் சிங்கங்கள்!

பெங்களூரு: இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் அசத்தி விட்டனர்.

இரு அணிகளும் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் சந்தித்தன. ஆப்கானிஸ்தானுக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டியாகும். முதல் போட்டியிலேயே அது பெரும் தோல்வியைத் தழுவியது.

இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பெற்ற இந்திய வெற்றியில் இந்திய சுழற் பந்து வீச்சாளர்களுக்கு பெரும் பங்குள்ளது. அவர்கள் மொத்தமாக 11 விக்கெட்களை வீழ்த்தினார்.

indian spinners rattle afghan batting order

போட்டிக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், இந்திய அணியை விட சிறந்த ஸ்பின்னர்கள் எங்களது அணியில் உள்ளனர். அவர்கள் இந்திய அணிக்கு கடுமையான சவால் அளிப்பார்கள் என்றும் கூறினார்.

அதற்கேற்றாற்போல் அவர்களது அணியில் நம்பர் 1, 20 ஓவர் பந்துவீச்சாளர் ரஷீத் கான் மற்றும் ஐபில் புகழ் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமத் நபி ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்தனர். ஆனால் எதிர்பார்த்தது போல் அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. சொற்ப விக்கெட்களை மட்டுமே வீழ்த்த முடிந்தது மற்றும் நிறைய ரன்களையும் விட்டு கொடுத்தனர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் 10க்கும் மேற்பட்ட விக்கெட்களையும் கைப்பற்றி குறைந்த ரங்களையே கொடுத்தனர் ..

ஆப்கானிஸ்தான் அணி சுழல் பந்துவீச்சு ஒரு அலசல்:

ரஷீத் கான் - 34.5 ஓவர்கள் - 154 ரன்கள் - 2 விக்கெட்கள்

முஜீப் - 15 ஓவர்கள் - 75 ரன்கள் - 1 விக்கெட்

நபி - 13 ஓவர்கள் - 65 ரன்கள் - 1 விக்கெட்

மொத்தம் : 62.5 ஓவர்கள் - 294 ரன்கள் - 4 விக்கெட்கள் - சராசரி: 4.7 ரன்கள் / ஓவர்

இந்திய அணி சுழல் பந்துவீச்சு (இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து):

அஸ்வின் - 19.4 ஓவர்கள் - 59 ரன்கள் - 5 விக்கெட்கள்

ஜடேஜா - 12.5 ஓவர்கள் - 32 ரன்கள் - 6 விக்கெட்கள்

மொத்தம் : 32.3 ஓவர்கள் - 91 ரன்கள் - 11 விக்கெட்கள் - சராசரி : 2.8 ரன்கள் / ஓவர்

கேப்டன் அஸ்கரா, இப்பொழுது உணர்ந்திருப்பார் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சின் பெருமையை!!

Story first published: Friday, June 15, 2018, 19:37 [IST]
Other articles published on Jun 15, 2018
English summary
Indian spinners proved that they are far better than Afghan bowlers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X