For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சானியா முதல் பிந்த்ரா வரை.. இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு பிரபலங்கள் ஒரு சேர ஆதரவு!

By Veera Kumar

சிட்னி: உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்திருந்தாலும், விளையாட்டு துறையை சேர்ந்த அனைத்து பிரபலங்களும் இந்திய அணிக்கு தங்களது ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை, சிலர் மிக மோசமாக விமர்சனம் செய்துவருகின்றனர். அதேநேரம், ரசிகர்களில் பலரும் இந்திய அணி அரையிறுதி வரை வந்ததை பாராட்டியுள்ளனர்.

ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டு வீரர்களும், தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால், தோல்வி என்பதை கையாள அனைவருமே கஷ்டப்படுவது இயல்புதான். ஆனால், உலக கோப்பை முழுக்கவுமே இந்தியா சிறப்பாக ஆடியது. ரசிகர்கள் மிகவும் என்ஜாய் செய்தனர்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

டாசில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுதான் மொத்த போட்டியின் முடிவையும் நிர்ணயித்தது. இந்தியா ஒருவேளை, ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள் மடக்கியிருந்தால், வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்.

வி.வி.எஸ் லட்சுமணன்

வி.வி.எஸ் லட்சுமணன்

அஸ்வினை தவிர வேறு எந்த ஒரு இந்திய பவுலருக்குமே, முக்கியமான பெரிய தொடர்களில் ஆடி அனுபவம் இல்லை. இருந்தாலுமே, ஆஸ்திரேலியாவை சமாளித்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் அவர்களால் வெற்றி பெற முடிந்தது.

யுவராஜ்சிங்

யுவராஜ்சிங்

எனது அணி வீரர்களுக்காக வருந்துகிறேன். அதேநேரம், ஆஸ்திரேலியா இந்த உலக கோப்பை முழுக்கவே சிறப்பாக ஆடிவந்துள்ளது. அவர்கள் பைனலுக்கு செல்ல தகுதியான வீரர்கள்தான்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா

நாம் எல்லாவற்றையும், எல்லா நேரமும் வெற்றிகொள்ள முடியாது. நெருக்கடிக்கு மத்தியிலும், உலக கோப்பை தொடர் முழுவதுமே, இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக ஆடியதை பார்த்து பெருமைப்படுகிறேன். அடுத்த முறை அதிருஷ்டம் கிடைக்க வாழ்த்துக்கள்.

துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா

துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா

இந்தியா மீது சில மீடியாக்கள் கடுமையாக விமர்சனம் செய்வதை பார்க்கும்போது, நமது நாட்டில் விளையாட்டு கலாசாரமே இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. விளையாட்டு கலாசாரம் வளர நாம் இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியுள்ளது. மொத்தத்தில், இந்திய கிரிக்கெட் அணி, தைரியமாகவே விளையாடியது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜமானது. இவ்வாறு பிரபலங்கள் அனைவருமே, இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, March 27, 2015, 11:23 [IST]
Other articles published on Mar 27, 2015
English summary
India’s sports fraternity had nothing but praise for the efforts of Mahendra Singh Dhoni’s World Cup team, which bowed out of the tournament Thursday with a 95—run semifinals loss to Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X