For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ஏன் ? ஷிகர் தவான் சொன்ன காரணம்.. அப்போ அவருக்கு அது பொருந்தாதா?

ஹாமில்டன் : இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வெறும் 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.பெரும்பாலான நேரத்தில் மழையே விளையாடியதால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூட காலையில் எழுந்து போட்டியை பார்க்க வேண்டும் என நினைத்த ரசிகர்களுக்கு வருண பகவான் ஏமாற்றத்தை கொடுத்து விட்டார்.

வெறும் 12.5 ஓவர் வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 89 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் இழந்தது.

கண்ணாம்பூச்சி காட்டிய மழை.. இந்தியா Vs நியூசி. ஆட்டம் பாதிப்பு.. 6 மணி நேரத்திற்கு பிறகு வந்த முடிவு கண்ணாம்பூச்சி காட்டிய மழை.. இந்தியா Vs நியூசி. ஆட்டம் பாதிப்பு.. 6 மணி நேரத்திற்கு பிறகு வந்த முடிவு

மழையால் ரத்து

மழையால் ரத்து

இந்த நிலையில் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், வானிலை நமது கையில் இல்லை. மழை நிற்கும் வரை நாங்கள் காத்திருந்தோம். போட்டி தொடங்கப்படும் என நினைத்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது நாங்கள் மூன்றாவது ஒருநாள் போட்டியில் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

ஆச்சரியத்தை கொடுத்தது

ஆச்சரியத்தை கொடுத்தது

இன்று ஆடுகளம் செயல்பட்ட விதம் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது .ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் கடந்த போட்டியை விட இன்றைய ஆட்டத்தில் பந்து அவ்வளவாக seam ஆகவில்லை .பேட்டிங் செய்வதற்கு ஏதுவான ஆடுகளமாக இருந்தது. சுப்மான் கில், இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்.

காரணம்

காரணம்

அதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கான காரணம் .கூடுதல் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. சஞ்சு சாம்சனுக்கு பதில் சுழற்பந்து வீசும் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். தீபக் சாஹர் பந்தை நன்றாக ஸ்விங் செய்வார். பேட்டிங்கிலும் எங்களுக்கு ரன்களை சேர்ப்பார் என்பதால் அவருக்கும் இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கொடுத்தோம்.

ஆர்வமாக இருந்தது

ஆர்வமாக இருந்தது

இளம் வீரர்களுக்கு கேப்டனாக செயல்படுவது மிகவும் ஆர்வமாக இருந்தது. அவர்களுடன் நானும் விளையாடும்போது இளம் வீரர் போல் என்னை நினைத்துக் கொண்டேன். இந்தத் தொடர் இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. சுப்மான் கில் பேட்டிங் செய்த விதமும் உம்ரான் மாலிக் பந்து வீசும் விதமும் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு அணியாக நாங்கள் சரியான திசையை நோக்கி செல்ல விரும்புகிறோம்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

கிறிஸ்ட் சர்ச்சில் கடைசி போட்டியில் பேட்டிங் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். கடைசிப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்வோம் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார். பந்து வீச்சாளர்களுக்காக சஞ்சு சாம்சனை நீக்கினேன் என்று ஷிகர் தவான் கூறியதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு வீரருக்காக யார் அணியில் சரியாக விளையாடவில்லையோ அவர்களை தான் நீக்க வேண்டுமே, தவிர நன்றாக விளையாடி கொண்டிருக்கும் நபரை நீக்க கூடாது என ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

Story first published: Sunday, November 27, 2022, 17:07 [IST]
Other articles published on Nov 27, 2022
English summary
Indian stand in captain shikhar dhawan reveals why he removed sanju samson from playing xi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X