For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடராஜனுக்கு நோ சான்ஸ்.. தவான் கேப்டன்.. இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

சென்னை: இலங்கைக்கு எதிராக இந்திய அணி ஆட இருக்கும் ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான அணி பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் நடக்கின்றது. ஜூலை 13ம் தேதி ஒருநாள் போட்டிகள் தொடங்க உள்ளனர். ஜூலை 25ம் தேதி கடைசி டி 20 போட்டி நடக்க உள்ளது.

Indian team announced by BCCI for Sri Lanka Series

இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடக்க உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் நடக்க உள்ள இந்த தொடருக்கு இந்திய அணி புதிய வீரர்களை அனுப்புகிறது. இந்திய அணியின் மூத்த வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இங்கிலாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டெஸ்ட் இறுதி போட்டியில் ஆட உள்ளனர். இதனால் இந்திய அணி புதிய இளம் வீரர்களை தேர்வு செய்து இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

கோலி, ரோஹித், ரஹானே எல்லோரும் இங்கிலாந்தில் உள்ளதால், இலங்கை செல்லும் இந்திய அணிக்கு தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் இடம்பெறாமல் போய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்திய அணியில் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, தேவதத் பாடிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்டியா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்கரியா இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து வருண் சக்ரவர்த்தி அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணிக்கு இரண்டு முறை வாய்ப்பு பெற்று பிட்னஸ், காயம் காரணமாக வாய்ப்பை இழந்தவர், இந்த முறை மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

ENG vs NZ: ஒரே டெஸ்ட் போட்டி.. 6 ENG vs NZ: ஒரே டெஸ்ட் போட்டி.. 6

நெட் பவுலர்களாக இஷான் பரோல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமார்ஜீத் சிங் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

Story first published: Thursday, June 10, 2021, 23:33 [IST]
Other articles published on Jun 10, 2021
English summary
Indian team announced by BCCI for Sri Lanka Series: Dhawan to captain the squad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X