For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் கூட நேரம் இல்லை.. கஷ்டமாக இருக்கிறது.. பிசிசிஐயிடம் சண்டைக்கு சென்ற கேப்டன் கோஹ்லி

தொடர்ந்து கிரிக்கெட போட்டிகளில் விளையாடி வருவதால் கஷ்டமாக இருப்பதாக இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டி அளித்து இருக்கிறார்.

By Shyamsundar

டெல்லி: தொடர்ந்து கிரிக்கெட போட்டிகளில் விளையாடி வருவதால் கஷ்டமாக இருப்பதாக இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் எதற்குமே நேரம் கிடைப்பது இல்லை என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதால் அவர் இப்படி கூறி இருப்பதாக தெரிகிறது. மேலும் இன்னும் தொடர்ச்சியாக பல போட்டிகள் வரிசைகட்டி நிற்கிறது.

இந்த நிலையில் அவர் தனது போட்டியில் பிசிசிஐ அமைப்பை சாடி கோபமாக பேசி இருக்கிறார். மேலும் சில நாட்களுக்கு முன்பு இவர் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு கேட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும் போட்டிகள்

தொடரும் போட்டிகள்

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்தபடியாக இரண்டு நாள் இடைவெளியில் தென்னாப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாட செல்ல இருக்கின்றது. மிகவும் பெரிய தொடரான இது ஜனவரி 5ல் ஆரம்பித்து பிப்ரவரி 24 வரை நடக்க இருக்கிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் என மாதக்கணக்கில் நடக்க இருக்கும் போட்டியாகும் இது.

ஓய்வு இல்லாத கோஹ்லி

ஓய்வு இல்லாத கோஹ்லி

அடுத்தடுத்து தொடர் போட்டிகளில் விளையாடுவதால் இந்திய அணி வீரர்கள் களைப்பு அடைந்துவிடக் கூடாது என 'ரொட்டேஷன் பாலிசி' என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி வீரர்களை அணியில் மாற்றி மாற்றி களம் இறக்கி வருகின்றனர். ஆனால் கோஹ்லி மட்டுமே இதில் ஓய்வு கிடைக்காமல் இருக்கிறார். கோஹ்லி கேட்டு இருந்த விடுப்பும் அவருக்கு அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கோபமான கோஹ்லி

கோபமான கோஹ்லி

இந்த நிலையில் ஒய்வு இன்றி விளையாடும் கோஹ்லி கோபமாக பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''தொடச்சியாக் நிறைய போட்டிகள் விளையாடுகிறோம். இலங்கை தொடர் முடிந்த இரண்டாவது நாள் தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டும். எனக்கு எதற்குமே நேரம் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் எப்படி சிறப்பாக ஆடுவது'' என்று மிகவும் கோபமாக பிசிசிஐ அமைப்பை சாடி பேசி இருக்கிறார்.

அஸ்வின் குறித்து

அஸ்வின் குறித்து

அணியில் நிலவி வரும் டரொட்டேஷன் பாலிசி தேர்வு முறை குறித்தும் அவர் பேசினார். அதில் ''இந்திய அணியில் ரொட்டேஷன் பாலிசி இருக்கிறது. எனவே இலங்கை தொடரில் விளையாடும் நபர்கள் பெரும்பாலும் தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை. மேலும் இந்திய அணி ஒரு இடது கை, ஒரு வலது கை ஸ்பின் பவுலருடன் தென்னாப்பிரிக்க செல்லும்'' என்றார். இதன் மூலம் இந்திய அணியில் அஸ்வினின் இடம் கேள்விக்குறி ஆகி இருக்கிறது.

Story first published: Thursday, November 23, 2017, 18:05 [IST]
Other articles published on Nov 23, 2017
English summary
Kohli is playing continuously for last three months. BCCI hasn't allowed his to take rest before South Africa series. So Kholi talks about BCCI rotation policy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X