For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் எதிர்காலமே இனி இவரு தான்…!! அடித்து சொன்ன கோலி.! அப்ப தோனி கதை காலி..?

Recommended Video

Kohli Praises Pant | இளம் வீரர் ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விராட் கோஹ்லி- வீடியோ

கயானா: 3வது டி 20 போட்டி போல, இளம் வீரர் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு அது வலுவானதாக அமையும் என்று கேப்டன் கோலி பாராட்டி உள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில், டி 20 போட்டிகளில் 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியில், இந்திய அணியின் தீபக் சாஹர் பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளை 4 ரன்களுக்கு கைப்பற்றினார். அவரது அசத்தல் பவுலிங்கில் 14க்கு 3 விக்கெட்டுகள் என்று சரிந்த வெஸ்ட் இண்டீஸ் பின்னர் தோற்றது.

ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் தீபக் சாஹர். போட்டிக்கு பின்னர் கேப்டன் கோலி கூறியதாவது: அணியில் இளம் வீரரான தீபக் சாஹர், புவனேஷ்குமார் போலவே அருமையாக வீசுகிறார்.

அபார பவுலிங்

அபார பவுலிங்

புதிய பந்தில் புவனேஷ்வர் குமார் எந்த அளவுக்கு திறமையாக வீசுவாரோ, அதையே தான் தீபக் சாஹரும் செய்கிறார். ஸ்விங் பவுலிங் தான் பலம். புதிய பந்தில் எதிர்பார்த்ததை விட அற்புதமாக பவுலிங் வீசுகிறார்.

அணியின் எதிர்காலம்

அணியின் எதிர்காலம்

இளம் வீரர் ரிஷப் பன்டை இந்திய அணியின் எதிர்காலமாக காண்கிறோம். அவர் இதே போன்றே சீராக ஆடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்றால் அணிக்கு வலுவாக அமையும்.

வலுவான அணி

வலுவான அணி

ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் சாதாராண அணி கிடையாது. ரொம்பவும் வலுவான அணி. எனவே அந்த போட்டிகளில் மிகவும் கடினமானதாக இருக்கலாம். ஆனாலும் அதை சிறப்பாக எதிர்கொள்வோம் என்றார்.

முதல் முறை பேட்டிங்

முதல் முறை பேட்டிங்

இந்த டி20 தொடரில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ் மென்கள் ஓரளவுக்கு ரன்களை எடுத்தனர். ஆனால், கோலி, பன்ட் அரை சதங்கள், தீபக் சாஹர் பவுலிங் ஆகியவற்றால், 3க்கு 0 என தொடர் இழப்பை அந்த அணியினால் தவிர்க்க முடியவில்லை.

Story first published: Wednesday, August 7, 2019, 13:00 [IST]
Other articles published on Aug 7, 2019
English summary
Indian team future player is rishabh pant says skipper virat kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X