பயிற்சிக்கு நடுவே திடீரென மருத்துவமனைக்கு சென்ற ரவி சாஸ்திரி..ட்விட்டரில் வெளியான உண்மை விவரம் என்ன?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு மத்தியிலும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்துள்ள விஷயம் பாராட்டை பெற்று வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சிக்கு இடையே தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அரசின் கோரிக்கை ஏற்று செய்துள்ள விஷயத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இறுதிகட்டம்

இறுதிகட்டம்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அகமதாபாத் நகரில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 4வது டெஸ்டில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறும். இந்த போட்டி வரும் 4-ம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

கொரோனா

கொரோனா

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்பவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு நேற்று திட்டம் ஒன்றை தொடங்கியது. இதனையடுத்து பிரதமர் மோடி முதல் நபராக நேற்று கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர், மாநில அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இன்று காலை அகமதாபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.250 கட்டணமாக மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. அதன்படி ரவி சாஸ்திரி இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பாராட்டு

பாராட்டு

இதுகுறித்து புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ள அவர்,

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். கொரோனா தொற்றுக்கு எதிர்த்து போராட இந்தியாவுக்கு வலு சேர்க்கும் மருத்துவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி. அப்பலோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர் காந்தாபென் அவரின் குழுக்களும் சிறப்பான பணியைச் செய்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian Team head coach Ravi Shastri receives first dose of COVID-19 vaccine
Story first published: Tuesday, March 2, 2021, 16:46 [IST]
Other articles published on Mar 2, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X