For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனைவியுடன் நாடு திரும்ப தயார்.. அணி மீட்டிங்கில் கொந்தளித்த இந்திய வீரர் - சமாதானம் செய்த கோலி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டரில் யாரை களமிறக்குவது என்பது குறித்த சிக்கல் இன்னமும் நீடிக்கிறது. அதன் நீட்சியாக டீம் மீட்டிங்கில் சில சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப் போட்டியின் தோல்வி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பல மாற்றங்கள் ஏற்படுத்திவிட்டது. ஏற்படுத்தியும் கொண்டிருக்கிறது.

2021ல் அதிக வருமானம்.. கொட்டும் பண மழை.. டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட் இதோ2021ல் அதிக வருமானம்.. கொட்டும் பண மழை.. டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட் இதோ

ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள், ஆனால், வெற்றி கிடைக்குமா?

ஏன் இந்த மாற்றம்?

ஏன் இந்த மாற்றம்?

இதில், முதல் டெஸ்ட் போட்டியில், மிடில் ஆர்டரில் சீனியர் வீரர் புஜாரா நீக்கப்படலாம் என்று நாம் முன்பே பார்த்திருந்தோம். அவருக்கு பதில், லோகேஷ் ராகுலை மிடில் ஆர்டரில் களமிறக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவும் பேசியிருந்தார். அதாவது, எப்போதும் ஓப்பனிங் இறங்கும் ராகுலை எப்படி மிடில் ஆர்டரில் களமிறக்குவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

முதல் டெஸ்டில் வாய்ப்பு

முதல் டெஸ்டில் வாய்ப்பு

இந்நிலையில், மிடில் ஆர்டரில் ராகுலை களமிறக்குவதா அல்லது புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பதா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதில், கோலி உட்பட பெரும்பாலானோர் ராகுல் பெயரை டிக் செய்யவே விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதே சமயம், சில பிசிசிஐ நிர்வாகிகள் புஜாராவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளிக்கலாம் என்று கூறுவதாகவும் தெரிகிறது.

அணி மீட்டிங்

அணி மீட்டிங்

இங்கு கோலியின் கான்செப்ட் என்பது, புஜாராவை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதில்லாமல், அவரை 2 அல்லது 3 டெஸ்ட் போட்டிகளில் வெளியே உட்கார வைக்கும் பட்சத்தில், ஓரளவு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறாராம். ஆனால், புஜாரா இதில் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மிக அண்மையில் நடந்த அணி மீட்டிங்கில், புஜாரா சற்று ஓப்பனாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

Recommended Video

T20 World Cup-ல் Opening களமிறங்க திட்டம் போட்ட Virat Kohli.. எச்சரிக்கும் Aakash Chopra
கோலி தரப்பில் விளக்கம்

கோலி தரப்பில் விளக்கம்

அந்த அணி மீட்டிங்கில் ரஹானே, புஜாரா, உள்ளிட்ட மிகச் சில சீனியர் வீரர்கள் மட்டும் பங்குபெற்றதாக தெரிகிறது. அந்த மீட்டிங்கில், லோகேஷ் ராகுல் இடம் குறித்து புஜாராவிடம் நேரடியாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில், தனது அதிருப்தியை வெளிக்காட்டிய புஜாரா, "நான் வேண்டுமானால் மனைவியை அழைத்துக் கொண்டு இந்தியா திரும்புவிடட்டுமா?" என்ற ரீதியில் தனது எதிர்ப்பினை அவர் பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கேப்டன் கோலியோ தான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தனது தரப்பில் புஜாராவை சமாதானப்படுத்தி இருக்கிறாராம்.

Story first published: Monday, July 12, 2021, 15:51 [IST]
Other articles published on Jul 12, 2021
English summary
indian team meet with virat kohli england test series - கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X