For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் பாஸ்?, யார் ?ஃபெயில்- இந்திய கிரிக்கெட் வீரர்களின் ரிப்போர்ட் கார்டு

கொல்கத்தா; டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவி, தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

Recommended Video

IPL 2022: SMAT Stars Who Could Make Debut | OneIndia Tamil

இதில் விராட் கோலி, ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக டிராவிட்டும் இந்த தொடரில் ஜோடி சேர்ந்தனர்.

இந்த தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்கள் பெற்ற மதிப்பெண்களை பார்க்கலாம்.

கோலிக்கு பாடம் புகட்டும் ரோகித்.. காரணமாக விளங்கும் தமிழக வீரர்.. இந்திய அணிக்குள் சண்டை ஆரம்பமா? கோலிக்கு பாடம் புகட்டும் ரோகித்.. காரணமாக விளங்கும் தமிழக வீரர்.. இந்திய அணிக்குள் சண்டை ஆரம்பமா?

அஸ்வின்

அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை தொடரில் சில ஆட்டங்கள் என அஸ்வின் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் தனது திறமையை நிரூபித்த அஸ்வின், இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் பத்துக்கு ஒன்பது மதிப்பெண்களை பெறுகிறார்.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்கிய 3 போட்டிகளில் 2 அரைசதம் விளாசினார். முதல் ஆட்டத்தில் அரைசதத்தை 2 ரன்களில் தவறவிட்டார். கேப்டன் பொறுப்பிலும் ரோகித் அபாரமாக செயல்பட்டார். இதனால் அவர் பத்துக்கு ஒன்பது மதிப்பெண்களை பெறுகிறார்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

ஜடேஜாவுக்கு பதில் ஆல் ரவுண்டராக அணியில் இடம்பெற்ற அக்சர் பட்டேல், முதல் போட்டியில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் , அடுத்த 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் தனது திறமையை நிரூபிக்க அவருக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அக்சர் பட்டேல் பத்துக்கு எட்டு மதிப்பெண்களை பெறுகிறார்.

ஹர்சல் பட்டேல்

ஹர்சல் பட்டேல்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது இருபது ஓவர் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்சல் பட்டேல், தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சால் நியூசிலாந்தின் ரன்களை கட்டுப்படுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே போன்று கடைசி ஆட்டத்திலும் ஹர்சல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, பேட்டிங்கில் 18 ரன்களையும் எடுத்தார். இதன் மூலம் ஹர்சல் பட்டேல் 10க்கு8 மதிப்பெண்களை பெறுகிறார்.

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல்-க்கு நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது. முதல் ஆட்டத்தில் 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இரண்டாவது ஆட்டத்தில் 65 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கே.எல். ராகுல் பத்துக்கு ஏழு மதிப்பெண்களை பெறுகிறார்.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் முதல் போட்டியில் பவுண்டரி விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். மூன்றாவது போட்டியில் பேட்டிங் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தும், அவர் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் அந்தப்போட்டியில் கட்டுக்கோப்பாக பந்துவீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் வெங்கடேஷ். இதன் மூலம் பத்துக்கு ஆறு மதிப்பெண்களை பெறுகிறார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் முதல் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்த 2 ஆட்டங்களில் பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் விக்கெட் கீப்பராக ரிஷப் எந்த குறையையும் வைக்கவில்லை.ஆனால் அதிரடி ரிஷப் பண்ட் தான் அணிக்கு முக்கியம். இதனால் பத்துக்கு அவர் ஐந்து மதிப்பெண்களையே பெறுகிறார்.

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், கடைசி 2 ஆட்டத்தில் சொதப்பினார். இதனால் அவர் பத்துக்கு 4 மதிப்பெண்களையே பெறுகிறார்.

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

இந்திய அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அரைசதம் விளாசி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.ஆனால் 2வது ஆட்டத்தில் 1 ரன், மூன்றாவது ஆட்டத்தில் டக் அவுட் என ரசிகர்களை கடுப்பேற்றினார் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் அவர் பத்துக்கு 3 மதிப்பெண்களையே பெறுகிறார்.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

வேகப்பந்துவீச்சில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபக் சாஹர், இந்த தொடரில் வாரி கொடுக்கும் வள்ளலாகவே இருந்தார். கடைசி ஆட்டத்தில் கேட்ச் மிஸ் செய்து ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தார். இருப்பினும் ஒரே ஆறுதல் கடைசி ஆட்டத்தில் பேட்டிங்கில் அசத்தினார். இதனால் அவர் 3 மதிப்பெண்களையே பெறுகிறார்.

Story first published: Tuesday, November 23, 2021, 12:31 [IST]
Other articles published on Nov 23, 2021
English summary
Indian Team Performance versus NZ in T20 series. Report card of Indian Players by their Performance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X