தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு? முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி!

Dhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ?

மும்பை : தோனி இந்திய அணியில் ஆட விருப்பத்துடன் இருக்கிறாரா? அவரது எதிர்கால திட்டம் என்ன? என தெரியாமல் குழப்பத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை விரைவில் தேர்வு செய்ய உள்ளது தேர்வுக் குழு.

தோனியின் நிலை தவிர பெரும்பாலான விஷயங்கள் எளிதாக முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால் தோனி மனதில் என்ன நினைத்திருக்கிறார் என்பது தெரியாத நிலையே உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கே மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பாமல் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ரிஷப் பந்த் தான் விக்கெட் கீப்பர்

ரிஷப் பந்த் தான் விக்கெட் கீப்பர்

தோனி 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை எனும் நிலையில், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் மாறி உள்ளார். அவருக்கு தான் இனி அணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தோனி நிலை என்ன?

தோனி நிலை என்ன?

இந்த நிலையில், தோனி தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆர்வமுடன் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. முன்பு 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வந்தன. ஆனால், தோனி இதுவரை ஓய்வை அறிவிக்கவில்லை.

கேட்க வேண்டும்

கேட்க வேண்டும்

இந்த குழப்பத்தை தீர்க்க ஒரே வழி தான் உள்ளது. இந்திய தேர்வுக் குழு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை தேர்வு செய்யும் முன், தோனியை தொடர்பு கொண்டு அவரது எதிர்கால திட்டம் என்ன என்பதை கேட்டறிய வேண்டும்.

கேள்வி கேட்பார்களா?

கேள்வி கேட்பார்களா?

தேர்வுக் குழுவினர் தோனியிடம் இந்த கேள்வியை கேட்பார்களா? அல்லது கேள்வியே இல்லாமல் அணியில் இருந்து நீக்குவார்களா? என்பது தெரியவில்லை. தோனி அணியில் இடம் பெற்றாலும் விக்கெட் கீப்பராக தொடர மாட்டார். அணியில் இருந்து ரிஷப் பந்த்துக்கு ஆலோசனை வழங்குவார் என்றும் கூறுகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian team selectors confused over Dhoni’s future ideas
Story first published: Thursday, July 18, 2019, 16:51 [IST]
Other articles published on Jul 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X