For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND Vs PAK: இந்த 3 பேரிடம் ரொம்ப கவனம் தேவை டீம் இந்தியா…!! இல்லைனா… மேட்ச் காலி..!!

லண்டன்: உலக கோப்பை தொடரில் பாக். அணியின் 3 முக்கிய வீரர்களை இந்தியா கவனமாக கையாள வேண்டும். அவர்களை சமாளித்துவிட்டால் வெற்றி எளிது. அந்த 3 பேர் யார் என்பது பற்றி பார்ப்போம்.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசி.இந்தியா போட்டி மழை விளையாடியதால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப் பட்டு தற்போது வரை தோல்வியை தழுவாத அணியாக வலம் வருகிறது. அடுத்தாக இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க ஒரு அணியுடன் மோத உள்ளது. பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது.

பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் வித்தியாசமான அணியாக வலம் வருகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான தோல்வி, இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வி என உள்ளது.

3 பாக். வீரர்கள்

3 பாக். வீரர்கள்

எனவே, உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா மிகுந்த கவனத்துடன், விவேகத்துடன் விளையாடுவது அவசியம். முக்கியமாக 3 வீரர்களை பற்றி இந்திய அணி அதிக கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜமானின் 114 ரன்கள்

ஜமானின் 114 ரன்கள்

பக்கர் ஜமான்.... இவர் இந்திய அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தக்கூடியவர். 2017ம் ஆண்டு சாம்பியன் டிராபியின் இறுதிப் போட்டியில் அவர் எடுத்த ரன்கள் 114. இந்திய அணியை தடுமாறச் செய்து கோப்பையை தன் நாட்டிற்கு எடுத்து செல்ல உதவியவர். 3 ஆண்டுகளாக தொடக்க ஆட்டக் காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளார். குறிப்பாக ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார்.

4 சதங்கள், 10 அரைசதங்கள்

4 சதங்கள், 10 அரைசதங்கள்

29 வயது தான் ஆகிறது ஜமானுக்கு... சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 48.57 சராசரியுடன் 4 சதங்கள் மற்றும் 10 அரைசதங்களை எடுத்துள்ளார். எதிரணி பந்து வீச்சை வெளுத்து வாங்கும் திறமை பெற்றவர். மிக முக்கியமாக, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அதிகம் உற்று நோக்கப்பட வேண்டிய வீரர். இந்திய அணி இவரிடம் கவனமாக இருக்க வேண்டும்.

சிறப்பான பேட்டிங்

சிறப்பான பேட்டிங்

அடுத்து வஹாப் ரியாஸ்.... தமது பவுலிங்கில் உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ் மேன்களை தடுமாறச் செய்யும் திறமை இல்லை. ஆனால், அவரது அதிரடி மற்றும் சிறப்பான பேட்டிங் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த போட்டியில் பார்க்க முடிந்தது. தனது அணிக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் 45 ரன்களை குவித்தார்.

சுவிங் பந்துவீச்சு

சுவிங் பந்துவீச்சு

வஹாப் ரியாஷ் இடது கை பவுலர்... பந்துகளை நன்றாக ஸ்விங் செய்வார். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசும் திறமை உடையவர். அத்துடன் 6.2 உயரம் கொண்ட இவர் சரியான அளவில் பவுன்ஸ் வீசினால், எதிரணியினர் திக்குமுக்காடி போவர். எனவே, இவரையும் இந்திய அணி நன்றாக உற்று நோக்க வேண்டும். காரணம்... இந்திய பேட்ஸ்மேன்கள் இடதுகை ஸ்விங் வேகப்பந்து வீச்சில் கடுமையாக தடுமாறுவார்கள் என்பது வரலாறு. கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராக இவர்களது ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருந்துள்ளது.

வானிலை மாறும்

வானிலை மாறும்

2011 உலக கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால் அதிக பவுலர்களுக்கு தான் சாதகமாக அமையும். எனவே தொடக்கத்திலேயே வஹாப் ரியாசுக்கு எதிராக இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

விக். வீழ்த்தி சாதனை

விக். வீழ்த்தி சாதனை

இந்தியாவிற்கு எதிராக கடும் நெருக்கடியை அளிப்பதில் வல்லவர் என்றால் அது முகமது அமீர் தான். 2019 உலகக் கோப்பையில் தற்போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இவருக்கு முதலிடம்.3போட்டிகளில் 10 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார். எனவே, இந்திய முகாம், இவரை அதிகம் கவனிக்க வேண்டும்.

பேட்ஸ்மென்கள் காலி

பேட்ஸ்மென்கள் காலி

முகமது அமீர் தனது இடதுகை வேகப்பந்து வீச்சில் தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் திறமை உடையவர். வானிலை ஸ்விங்குக்கு சாதகமாகி விட்டால், கண்டிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்துவிடுவார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் 30 ரன்களை விட்டு கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். போட்டியில் ஆஸ்திரேலிய அணி 307 ரன்களை குவித்தது. ஆனால் முகமது அமீரின் எகானமி ரேட் 3... இந்தியா, இதை கொஞ்சம் சீரியசாக பார்க்க வேண்டும்.

மைதானங்கள் கை கொடுக்கும்

மைதானங்கள் கை கொடுக்கும்

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா, தவான், கோலி ஆகியோரது விக்கெட்டுகளை காலி செய்தவர் இவர். அந்த ட்டியில் 6 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக பாகிஸ்தானுக்கு மடை மாற்றியவர். அமீருக்கு இங்கிலாந்து மைதானங்கள் அழகாக கை கொடுக்கும். எனவே, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.

Story first published: Saturday, June 15, 2019, 15:15 [IST]
Other articles published on Jun 15, 2019
English summary
Indian team should more cautious about 3 pakistan players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X