For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு வருஷம் ஆச்சு.. இன்னும் ஆள் கிடைக்கலை.. தோனி இல்லாமல் தவிக்கும் டீம்.. உண்மை நிலை இதுதான்!

மும்பை : தோனி இந்திய அணியில் இடம் பெற்று சுமார் ஓராண்டு காலம் ஆகிறது.

Recommended Video

How Dhoni changed between 2007 and 2013, says Irfan Pathan

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆக இருந்த தோனிக்கு மாற்றாக இந்திய அணியில் இதுவரை எந்த வீரரும் அமையவில்லை.

விக்கெட் கீப்பிங்கில் தோனி இல்லாமல் இந்திய அணி தவித்து வருகிறது. இந்த ஓராண்டில் மட்டும் மூன்று வீரர்கள் விக்கெட் கீப்பிங் பணியை செய்துள்ளனர்.

கேப்டன் ஆன புதிதில் என்ன செய்தார் தெரியுமா? தோனி பற்றி அந்த முன்னாள் வீரர் ஓபன் டாக்!கேப்டன் ஆன புதிதில் என்ன செய்தார் தெரியுமா? தோனி பற்றி அந்த முன்னாள் வீரர் ஓபன் டாக்!

தோனி

தோனி

2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக ஆடிய சர்வதேச போட்டி. அதன் பின் அவர் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் கூட ஆடவில்லை. கிரிக்கெட்டை விட்டே ஒதுங்கி இருந்தார்.

மாற்று விக்கெட் கீப்பர்

மாற்று விக்கெட் கீப்பர்

தோனி இல்லாத நிலையில் இந்திய அணி அவருக்கு மாற்றாக இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை அணியில் தொடர்ந்து ஆட வைத்தது. .துவக்கத்தில் நம்பிக்கை அளித்தார் ரிஷப் பண்ட். ஆனால், தோனி அளவுக்கு விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்ற அழுத்தம் ஏற்பட்டது.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

மறுபுறம் அவரது பேட்டிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவரது இயல்பான ஆட்டத்தையும் ஆட முடியாமல், அணி நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்பவும் ஆட முடியாமல் தவித்தார். எனினும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்று வந்தார்.

டெஸ்ட் அணி குழப்பம்

டெஸ்ட் அணி குழப்பம்

டெஸ்ட் அணியில் இருந்து மட்டும் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு விரிதிமான் சாஹா மீண்டும் இடம் பெற்றார். பின் நியூசிலாந்து தொடரில் பண்ட் சேர்க்கப்பட்டு, சாஹா நீக்கப்பட்டார். டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் குழப்பம் ஒருபுறம் இருக்க அடுத்ததாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வேறொரு மாற்றம் ஏற்பட்டது.

ரிஷப் பண்ட் காயம்

ரிஷப் பண்ட் காயம்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் செயல்பட்டார். அவர் உள்ளூர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்த அனுபவம் உள்ளவர்.

கேப்டன் கோலி முடிவு

கேப்டன் கோலி முடிவு

கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருந்ததை அடுத்து அவரையே அணியின் விக்கெட் கீப்பராக மாற்றும் முடிவில் இருந்தார் கேப்டன் கோலி. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு பின், இலங்கை தொடரிலும் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை தொடர்ந்தார்.

காயம் ஏற்படலாம்

காயம் ஏற்படலாம்

ஆனால், சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் கேஎல் ராகுல், விக்கெட் கீப்பராக அதிக நாள் தொடர்ந்தால் அவருக்கு காயம் ஏற்படலாம் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து கூறினர். அதனால், அவர் நிரந்தர விக்கெட் கீப்பராக செயல்பட முடியாது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

இதன் இடையே சஞ்சு சாம்சனுக்கு நீண்ட காலம் கழித்து அணியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேட்ஸ்மேனாக நிரூபித்தால், விக்கெட் கீப்பராக அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருந்தது. எனினும், தனக்கு கிடைத்த ஒரீரு வாய்ப்புகளிலும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் சாம்சன்.

ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை

ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை

தற்போது அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இருக்கிறார். அதே சமயம் ரிஷப் பண்ட் மீதும் நம்பிக்கை வைத்து அவரையும் அணியில் தொடர வைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம். யார் அணியின் விக்கெட் கீப்பர் என்பதில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை.

கடினம் தான்

கடினம் தான்

தோனி விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவது எந்த வீரருக்கும் கடினம் தான். இந்திய அணி தோனி இல்லாமல் தவித்து வருகிறது என்பதே உண்மை. ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய அணியின் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Story first published: Sunday, June 28, 2020, 17:28 [IST]
Other articles published on Jun 28, 2020
English summary
Indian team struggling without proper wicket keeper batsmen like Dhoni. Rishabh Pant failed to prove and KL Rahul is temporarily keeping the wicket for the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X