For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹேப்பி.. 20 நாட்கள் ஹேப்பி.. இந்திய அணிக்கு "சர்பிரைஸ்" அறிவிப்பு - மனைவிகள் குஷி

லண்டன்: 'நாக்குத்தள்ளிடுச்சுப்பா..' என்று நாம் எப்போதாவது சொல்வதுண்டு. அதை இப்போது ஒட்டுமொத்த இந்திய அணியும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நான்கு மாத பயணமாக இங்கிலாந்து டூர் சென்றிருக்கிறது. வரும் ஜூன் 18ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூஸிலாந்துடன் மோத தயாராகிவருகிறது.

அதன் பிறகு, சுமார் ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் போட்டி, ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது.

 ஒன்றரை மாத இடைவெளி

ஒன்றரை மாத இடைவெளி

ஜூன் 18 முதல் முழுதாக ஒன்றரை மாதத்திற்கு இந்திய அணி சும்மாவே இருக்கப் போகிறது. கேட்கவே அற்புதமான ஷெட்யூலாக இருக்கிறதல்லவா! முதலில் ஒரு டெஸ்ட் போட்டி, அப்புறம் ஒன்றரை மாதம் லீவ். அதே நாட்டில் சும்மாவே இருக்க வேண்டும். அந்த ஒன்றரை மாத கால இடைவெளியில் வீரர்கள் தங்கும் செலவு, உணவு என ஏகப்பட்ட செலவுகளை பிசிசிஐ கவனிக்க வேண்டும்.

 ஜுலை 14

ஜுலை 14

சரி.. இந்த உலக லெவல் டூர் பிளான் பற்றி நாம் பெரிதாக பேச வேண்டாம். விஷயத்துக்கு வருவோம். இந்த ஒன்றரை மாத கேப்பில், கிட்டத்தட்ட 20 நாட்கள் இந்திய வீரர்கள் பயோ-பபுளில் இடம் பெற தேவையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் 22ம் தேதி தொடரை முடிக்கும் இந்திய அணி, அதன் பிறகு ஜுலை 14ம் தேதி அசெம்பிள் ஆனால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.

 எச்சரிக்கை அவசியம்

எச்சரிக்கை அவசியம்

இந்த 20 நாள் இடைவெளியில் வீரர்கள் பயோ-பபுளை விட்டு வெளியேறி, அவர்கள் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம். எனினும், வைரஸ் அதிகம் உள்ள பகுகுதிகளுக்கு செல்லாமல், வைரஸ் தொற்று குறைவாக உள்ள இடங்களுக்கு செல்வது சிறந்தது. வைரஸ் முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிடாமல் முடிந்தவரை எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அப்புறம் மாட்டிக்குவீங்க

அப்புறம் மாட்டிக்குவீங்க

அதேசமயம், 20 நாள் இடைவெளி இருக்கிறது என்பதால், வீரர்கள் வேறு ஏதும் நாடுகளுக்கு சென்று மாட்டிக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் வேறேதும் நாடுகளுக்கு சென்று, அங்கு வைரஸ் மீண்டும் அதிகரித்தால் அதனால் மீண்டும் இங்கிலாந்து திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே வீரர்கள் அப்படி குடும்பத்துடன் வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீரர்கள் இங்கிலாந்திலேயே பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்க ஏதுவாக இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் பிசிசிஐ சார்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

Story first published: Tuesday, June 8, 2021, 14:40 [IST]
Other articles published on Jun 8, 2021
English summary
indian team 20-day Break Bio-bubble wtc final - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X