For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோஹ்லி Vs இந்தியன் டாப் ஆர்டர் பேட்டிங்.. ஒரு விறுவிறு ஆய்வு!

பெங்களூரு : இந்திய அணி கடந்த 9 மாதங்களில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மொத்தம் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரே ஒரு இன்னிங்சில் மட்டுமே 300 ரன்களை கடந்துள்ளது. மற்ற 9 இன்னிங்ஸ்களிலும் குறைவான ரன்களையே எடுத்துள்ளது. அதற்கு காரணம் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சரிவர பேட்டிங் செய்யாததே ஆகும்.

இந்திய கேப்டன் விராட் கோஹ்லியை தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடாததே இந்திய அணி ரன்களை குவிக்காததற்கு முக்கிய காரணம்.

indian-top-order 15-08-2018


தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் விராட் கோஹ்லி இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். மற்ற வீரர்களில் புஜாரா ஒருவர் மட்டுமே ஜோஹனஸ்புர்கில் அரைசதம் அடித்த ஒரே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்.

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் கோஹ்லி அடித்த ரன்கள் 526. மற்ற அனைத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இணைந்து அடித்த ரன்கள் 505 மட்டுமே.

விராட் கோஹ்லியின் சராசரி 52.60. ஆனால் மற்ற எந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் சராசரி 20யை கூட தொடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

முக்கியமான பிரச்சனை என்னவெனில் இந்த 10 இன்னிங்ஸ்களில் இந்திய அணி தனது முதல் விக்கெட்டையை 10 ஓவர்களுக்கு உள்ளாக இழந்தது 9 முறையாகும். இந்த 10 இன்னிங்சிலும் முரளி விஜய் அடித்த மொத்த ரன்கள் 128 மட்டுமே. அதில் 6 போட்டியில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக நடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட் ஆனார்.

மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா களத்தில் நீண்ட நேரம் நிற்கின்றார்.ஆனால் ரன்கள் வந்த பாடில்லை.

அடுத்து வரும் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடினால் மட்டுமே இங்கிலாந்து மண்ணில் தொடர் தோல்வியில் இருந்து தப்ப முடியும். இல்லையெனில் அந்த அணி 5-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தினால் கூட ஆச்சரியமில்லை.






Story first published: Wednesday, August 15, 2018, 13:21 [IST]
Other articles published on Aug 15, 2018
English summary
Indian top order averages less than 20 in recent 5 overseas tests
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X