For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க மட்டும் சும்மாவா.. புதிய வரலாறு படைக்கும் இந்திய மகளிர் அணி.. பிசிசிஐ போட்ட சூப்பர் ப்ளான்!

மும்பை: மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை எனக்குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய மகளிர் அணிக்கு போதுமான தொடர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என பிசிசிஐ மீது புகார்கள் எழுந்து வந்தது.

ரசிகர்களின் கனவு.. புது அவதாரம் எடுக்கும் டிராவிட் - படையை கூட்டிக்கிட்டு இலங்கை பயணம்ரசிகர்களின் கனவு.. புது அவதாரம் எடுக்கும் டிராவிட் - படையை கூட்டிக்கிட்டு இலங்கை பயணம்

இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை முடித்தவுடன் ஆஸ்திரேலியாவுக்கு பறக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் ஜூன் 16ம் தேதி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்திய மகளிர் அணி கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். மேலும் அதன்பிறகு ஜுன் 27 முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஜூலை 9ம் தேதி முதல் 3 டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது.

பகலிரவு டெஸ்ட்

பகலிரவு டெஸ்ட்

இந்நிலையில் அவர்களுக்கான அடுத்த டெஸ்ட் தொடரை அறிவித்துள்ளது பிசிசிஐ. ஜூலை 11ம் தேதி வரை இங்கிலாந்துடனான தொடர்களில் பங்கேற்கும் மகளிர் அணி, அதன் பிறகு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதுவும் தனது முதல் இரவு பகல் ( பிங்க் பால்) டெஸ்ட் போட்டி ஆகும். இந்த போட்டி செப்டம்பர் 30ம் தேதி பெர்த் நகரில் நடைபெறவுள்ளது. இந்திய மகளிர் அணி கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

செப் 19 - முதல் ஒருநாள் போட்டி

செப் 22 - 2வது ஒருநாள் போட்டி

செப் 24 - 3வது ஒருநாள் போட்டி

செப் 30 - முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி

அக் 7 - முதல் டி20 போட்டி

அக் 9 - 2வது டி20 போட்டி

அக் 11 - 3வது டி20 போட்டி

2வது பகலிரவு

2வது பகலிரவு

உலக மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரே ஒரு பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே நடைபெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் முதல் முறையாக பகலிரவு டெஸ்டில் மோதியது. இந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது.

நம்பிக்கை

நம்பிக்கை

இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மெக் லானிங், மகளிர் கிரிக்கெட்டில் நிறைய டெஸ்ட் போட்டிகளை கொண்டு வரவேண்டும் என நீண்ட நாட்களாக கோரி வந்தோம். இந்திய அணி, இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டியை முடித்துக்கொண்டு வருவதால் அவர்களுக்கும் ஒரு அனுபவமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 20, 2021, 18:26 [IST]
Other articles published on May 20, 2021
English summary
Indian Women's Cricket Team To Play its First ever Pink Ball Test!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X