For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை இருந்தா என்ன.. ஜாலியாக பாங்க்ரா டேன்ஸ் ஆடும் இந்திய மகளிர் கிரிக்கெட்

கயானா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெறும் உலக டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

இதற்கான அணி அறிமுக விழாவில் இந்திய வீராங்கனைகள் பாங்க்ரா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. அணியில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்திய அணியினர் நேர்மறை மனநிலையில் உள்ளனர்.

இந்திய அணியின் தோல்வி

இந்திய மகளிர் அணி சென்ற முறை 2017 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியும், அதில் தோல்வி அடைந்தனர். இந்திய மகளிர் அணி அழுத்தம் தரும் சேஸிங் போட்டிகளில் சரியாக ஆடுவதில்லை என்ற புகார் இருந்தது.

அதிரடியாக ஆட பயிற்சி

அதிரடியாக ஆட பயிற்சி

தற்போது பயிற்சியாளர் ரமேஷ் போவார் தலைமையில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியினர், பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஆட பயிற்சி செய்து வருகின்றனர். இதனையடுத்து, இந்திய வீராங்கனைகள் நேர்மறை எண்ணத்துடன் உலக டி20 தொடரில் பங்கேற்க உள்ளனர்.

ஐந்து அணிகள்

ஐந்து அணிகள்

இந்த தொடரில் இந்தியா "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் மொத்தமாக பத்து அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தற்போது டி20 தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இளம் வீராங்கனைகள்

இளம் வீராங்கனைகள்

இந்திய அணியைப் பொறுத்தவரை ஸ்மிருதி மந்தனா, ஜெமிமாஹ் ரோட்ரீகஸ் உள்ளிட்ட வீராங்கனைகள் இந்திய அணியில் வலுவாக உள்ளனர். பயிற்சியாளர் ரமேஷ் போவார் கூறுகையில் இந்திய அணியில் இளம் வீராங்கனைகள் இருப்பது நல்ல விஷயம். அவர்கள் பயம் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என கூறினார்.

Story first published: Monday, November 12, 2018, 19:35 [IST]
Other articles published on Nov 12, 2018
English summary
Indian Women T20 Players are enjoying their time ahead of World T20 Championship
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X