For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8-4-7-5 ஆசிய சாதனை நிகழ்த்திய அற்புத வீரர் பும்ரா..! எப்படி நடந்தது..? ஓர் ஆச்சர்ய சம்பவம்

Recommended Video

ஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த ரஹானே | Ind Vs WI Test | Ajinkya Rahane

நார்த் சவுண்ட்: ஆன்டிகுவா டெஸ்டில், 8 ஓவர்கள் வீசி 4 மெய்டன், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆசிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் பும்ரா.

வெஸ்ட் இண்டீசில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களுக்கும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா, 3ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்திருந்தது. 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியாவில் கேப்டன் கோலி, மேற்கொண்டு ரன் சேர்க்காமல் 51 ரன்களில் வெளியேறினார். ரகானேவுடன் கைகோர்த்த விஹாரி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நாங்க தான் ஜோடி நம்பர் 1.. சச்சின், கங்குலி சாதனையை கூட்டணியாக காலி செய்த கோலி - ரஹானே! நாங்க தான் ஜோடி நம்பர் 1.. சச்சின், கங்குலி சாதனையை கூட்டணியாக காலி செய்த கோலி - ரஹானே!

சூப்பர் சதம்

சூப்பர் சதம்

மறுமுனையில் நங்கூரமாய் நின்று சூடிய ரகானே டெஸ்ட் அரங்கில் தனது 10வது சதத்தை பதிவு செய்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஹாரி 93 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 343 ரன்கள் சேர்த்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

பின்னர் 419 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியது வெஸ்ட் இண்டீஸ். தொடக்க வரிசை வீரர்களை சாய்த்தனர் பும்ராவும், இஷாந்த் சர்மாவும். அற்புதமான பவுலிங்கில் 100 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 1க்கு 0 என தொடரில் முன்னிலை பெற்றது.

5 விக். அசத்தல்

5 விக். அசத்தல்

இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ராஸ்டன் சேஸ், ரோச், கம்மின்ஸ் ஆகிய 3 பேர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எட்டினர். மற்ற அனைவரும் சிங்கிள் டிஜிட்தான்.

8 பேர் சிங்கிள் டிஜிட்

8 பேர் சிங்கிள் டிஜிட்

கிட்டத்தட்ட 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. இந்திய தரப்பில், 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

ஆசிய சாதனை

ஆசிய சாதனை

இதன் மூலம் ஒரு புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் பும்ரா. அதாவது அவர் பங்கேற்ற வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள் அனைத்திலும் 5 விக்கெட் சாய்த்திருக்கிறார். தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் 5 விக். வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

Story first published: Monday, August 26, 2019, 10:47 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
India's ace bowler hasprit bumrah, made Asian record against west indies in Antigua.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X