For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup Flashback: 1975 முதல் 2015 வரை.. இந்தியாவின் உலக கோப்பை வரலாறு.. எக்ஸ்க்ளூசிவ் பதிவு

Recommended Video

1999 world cup | 2019 world cup | 1999 கிரிக்கெட் உலகக்கோப்பை நினைவலைகள்

லண்டன்:இங்கிலாந்தில் உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் உலக கோப்பை பயணங்கள் பற்றி இங்கே காணலாம். உலக கோப்பை வரலாற்றில் மொத்தம் 2 முறை இந்தியா சாம்பியானாகி இருக்கிறது.

உலக நாடுகள் பலவற்றிலும் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் அணி என்று கூறினால் அது இந்திய அணி தான். 1975 மற்றும் 1979 ஆகிய 2 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி பெரிதாக சாதிக்கவில்லை. முதல் சுற்றோடு சொந்த ஊர் திரும்பியது.

அந்த 2 தொடர்களிலும் சாம்பியனானது மேற்கிந்திய தீவுகள் அணி தான். 1983ம் ஆண்டு 3வது முறையாக கோப்பையை கைப்பற்ற களம் இறங்கியது மேற் கிந்திய தீவுகள் அணி. கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

 IND vs BAN Live : ரோஹித் - தவான் மீண்டும் சொதப்பல்.. கோலி கை கொடுப்பாரா? IND vs BAN Live : ரோஹித் - தவான் மீண்டும் சொதப்பல்.. கோலி கை கொடுப்பாரா?

கபில்தேவ் விலகல்

கபில்தேவ் விலகல்

அடுத்த முறை சொந்த மண்ணில் நடந்தும் கோப்பையை தக்க வைக்க முடியாமல் போனது. அரையிறுதியோடு வெளியேறியதால் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கபில்தேவ். 1992ம் ஆண்டு 5வது உலக கோப்பைக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட முகமது அசாருதீன் தலைமையிலான அணி 8 ஆட்டங்களில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று 7வது இடத்தை பிடித்தது.

மைதானம் போர்க்களம்

மைதானம் போர்க்களம்

96ம் ஆண்டில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணிக்கு கோப்பை என்று உலகமே அறுதியிட்டு கூறியது. ஆனால், இலங்கையிடம் படு மோசமாக விளையாடியதால் 70 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே போர்க்களமானது.

இலங்கைக்கு வெற்றி

இலங்கைக்கு வெற்றி

ஆத்திரமடைந்த ரசிகர்கள் கேலரிக்கு தீ வைத்தனர். வன்முறை நீடித்ததால், அத்தோடு ஆட்டம் முடிவுற்று, இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வினோத் காம்ப்ளி கண்ணீரோடு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

சூப்பர் சிக்ஸ் சோகம்

சூப்பர் சிக்ஸ் சோகம்

அடுத்த தொடரில், சூப்பர் சிக்ஸ் பிரிவோடு பெருத்த சோகத்துடன் வெளியேறியது இந்திய அணி. தொடர்ந்து 3 உலக கோப்பை அணிக்கு கேப்டனாக இருந்த அசாருதீன் அந்த தொடரோடு ராஜினாமா செய்தார்.

இந்திய அணியின் ஆதிக்கம்

இந்திய அணியின் ஆதிக்கம்

2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணிக்கு சவுரவ் கங்குலியை கேப்டனாக நியமித்தது நல்ல பலன் கிடைத்தது. இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் மற்ற அணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியதால் கோப்பையுடன் வருவார்கள் என்று நாடே எதிர்பார்த்தது.

கை நழுவிய கோப்பை

கை நழுவிய கோப்பை

ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் இறுதி போட்டியில், விழுந்ததால் கோப்பை கை நழுவியது. பயிற்சியாளர் கிரேக் சாப்பல், கங்குலி இடையேயான மோதல் உச்சத்தை அடைந்தது. கங்குலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

முதல் சுற்று

முதல் சுற்று

இந்திய பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியிலிருந்தும் கழற்றிவிட முயற்சித்தார். சீனியர் வீரர்களான டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், ஹர்பஜன்சிங் ஆகியோர் தாதாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். அணியில் இடம் கிடைத்தாலும் போதிய ஒற்றுமை ஏற்படாததால் முதல் சுற்றோடு மூட்டையை கட்டியது இந்தியா.

இங்கி. சமநிலை

இங்கி. சமநிலை

2007ம் ஆண்டு முதல் சுற்றோடு வெளியேற காரணமாக அமைந்த வங்க தேசத்துடன் முதல் ஆட்டம். எனவே, 2011ல் மிக கவனத்துடன் அடியெடுத்து வைத்த தோனி தலைமையிலான இந்திய அணி 187 ரன்களில் வாரி சுருட்டியது. இங்கிலாந்துடன் சமநிலையில் முடிந்தது.

பாண்டிங் கடைசி போட்டி

பாண்டிங் கடைசி போட்டி

இக்கட்டான கட்டத்தில் தென் ஆப்ரிக்காவை சாய்த்து நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் பங்கேற்ற கடைசி போட்டி இந்தியாவுடன் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனாலும் சதமடித்த திருப்தியோடு வெளியேறினார்.

மைதானத்தில் கிலானி

மைதானத்தில் கிலானி

பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பஞ்சாப் முதல்வர் என முக்கிய பிரமுகர்களுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் குழுமியிருந்தனர். வீறுகொண்டு எழுந்த இந்தியா, பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கையின் இலக்கு

இலங்கையின் இலக்கு

லீக் ஆட்டங்களில் பாகிஸ்தானை தவிர வேற எந்த அணியுடனும் தோற்காத இலங்கை இறுதி போட்டியில் நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொண்டது. ஜெயவர்த்தனே சதத்தால், 274 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

இந்தியா சாம்பியன்

இந்தியா சாம்பியன்

தனது கடைசி ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் களமிறங்கிய சச்சின் சோபிக்க வில்லை. நெருக்கடியை சமாளித்து கம்பீர் கைகொடுக்க கடைசி கட்டத்தில் குலசேகரா வீசிய 49 ஓவரின் 2வது பந்தை சந்தித்த கேப்டன் தோனி, லாங் ஆன் திசையில் எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பி ஆட்டத்தை கச்சிதமாக முடித்தார். அரங்கமே அதிர்ந்தது.

அரையிறுதியில் தோல்வி

அரையிறுதியில் தோல்வி

அந்த இரவு ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவு. கேலரியிலிருந்த சச்சின் மைதானத்திற்குள் மகிழ்ச்சியுடன் ஓடி வந்தார். தாம் சிறுவனாக இருந்த போது, பந்தெடுத்து போட்ட மைதானத்தில் உலக கோப்பையை கைபிடித்ததால் அதிக உணர்ச்சிவசமாக காணப்பட்டார். 11வது உலக கோப்பைக்கும் தோனியே தலைமை தாங்கினார். அரையிறுதி வரைக்கும் முன்னேறிய இந்தியா சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Tuesday, May 28, 2019, 18:15 [IST]
Other articles published on May 28, 2019
English summary
Indias world cup travel from 1975 to 2015, a detail report.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X